உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாவிடின் நீதிமன்றம் செல்வோம் - பேராசிரியர் திஸ்ஸ விதாரண

Published By: Digital Desk 2

03 Nov, 2022 | 03:53 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மாகாண சபை தேர்தலை காலவரையறையின்றி பிற்போட்டுள்ளதை போன்று உள்ளுராட்சி மன்றத் தேர்தலையும் பிற்போட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கிறார்.

திட்டமிட்ட வகையில் எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இல்லாவிடின் நீதிமன்றம் செல்வோம் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் குறிப்பிட்டதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தல் முறைமையை திருத்தம் செய்ய அவதானம் செலுத்தியுள்ளமை அவதானத்திற்குரியது.

மாகாண சபைகள் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக் கூற வேண்டும்.

MP Prof. Tissa Vitharana appointed as COPA Chairman - LankaPuvath

மாகாண சபைகள் தொடர்பான எல்லை நிர்ணய அறிக்கை 2018 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு 139 வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டது.

நல்லாட்சி அரசாங்கத்தில் உள்ளுராட்சிமன்றம் மற்றும் மாகாண சபைகள் அமைச்சராக பதவி வகித்த பைஸர் முஸ்தப்பா அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்து, அவரும் அறிக்கைக்கு எதிராகவே வாக்களித்தார்.

இதனை தொடர்ந்து அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எல்லை நிர்ணய மீளாய்வு குழுவை அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நியமித்தார்.

3 மாத காலத்திற்குள் மீளாய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ள போதும் இதுவரை அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.

மாகாண சபை தேர்தலை நடத்தாமலிருக்க நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்த சூழ்ச்சி வெற்றிப்பெற்றது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நோக்கத்திற்கமைய மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதற்கு எவ்வித தடைகளும் கிடையாது.எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இவ்வாறான பின்னணியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தல் முறைமை திருத்தம் செய்யப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

இவரது கருத்திற்கமைய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தேர்தல் முறைமையை திருத்தம் செய்ய பாராளுமன்ற தெரிவு குழுவை ஸ்தாபிக்குமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் முறைமையை திருத்தம் செய்ய வேண்டிய தேவை கிடையாது.பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான குழு தொகுதிவாரி முறைமையிலான தேர்தல் முறைமை சிறந்தது என அறிக்கை சமர்ப்பித்துள்ளது,தேர்தல் முறைமையில் திருத்தம் செய்ய வேண்டிய தேவை கிடையாது,பிரதமர் தினேஷ் குணவர்தன

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் கைபேசி அழைப்பால் பறிபோன 2...

2025-01-25 12:33:27
news-image

மகளின் நண்பியை பாலியல் துஷ்பிரோயகம் செய்ய...

2025-01-25 12:20:10
news-image

இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது!

2025-01-25 11:40:26
news-image

அநுராதபுரத்தில் புதையல்களுடன் ஒருவர் கைது !

2025-01-25 11:24:21
news-image

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி ; கடந்த...

2025-01-25 11:20:39
news-image

வாழைச்சேனையில் இரு குழுக்களுக்கிடையில் தகராறு ;...

2025-01-25 11:00:29
news-image

யோஷித்த ராஜபக்ஷ கைது!

2025-01-25 12:23:33
news-image

திருகோணமலை மாவட்ட செயலக தைப்பொங்கல் விழா

2025-01-25 10:38:26
news-image

யாழ். பலாலியில் 101 கிலோ கேரள...

2025-01-25 10:00:45
news-image

சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்ற கைதி மது...

2025-01-25 10:27:23
news-image

மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூட்டு...

2025-01-25 09:50:15
news-image

கல்கிஸ்ஸவில் 29 வயதுடைய போதைப்பொருள் வர்த்தகர்...

2025-01-25 09:44:02