விஜயின் 'வாரிசு' பட சிங்கிள் ட்ராக் அப்டேட்

Published By: Digital Desk 2

03 Nov, 2022 | 12:43 PM
image

தளபதி விஜய் நடிப்பில் தயாராகி வரும் 'வாரிசு' படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கான குறு முன்னோட்டம் இன்று மாலை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

'தோழா' படத்தை இயக்கிய இயக்குநர் வம்சி பைடியபள்ளி இயக்கத்தில் தயாராகி வரும் புதிய தமிழ் திரைப்படம் 'வாரிசு'. இந்த படத்தில் தளபதி விஜய் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். இவர்களுடன் பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு எஸ். தமன் இசையமைத்திருக்கிறார்.

'வாரிசு' படத்தின் புதிய தகவல்களுக்காக விஜயின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அவர்களுக்கு இப்படத்தின் இசையமைப்பாளர் தமன், 'தீபாவளிக்கு விருந்து உண்டு' என சூசகமாக தெரிவித்திருந்தார். ஆனால் தீபாவளிக்கு விஜயின் வாரிசு படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியாகின. இந்நிலையில் 'வாரிசு' திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு பாடலுக்கான குறு முன்னோட்டம் இன்று மாலை 6:30 மணி அளவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பொங்கல் திருவிழா விடுமுறையில் வெளியாகவிருக்கும் விஜயின் 'வாரிசு' திரைப்படத்தில் இடம் பெறும் சிங்கிள் ட்ராக்கிற்கான ப்ரோமோ இன்று வெளியாவதால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'கர' நிச்சயமாக பிளாக் பஸ்டர் ஹிட்டாகும்-...

2026-04-20 16:24:37
news-image

நடிகர் கயல் சந்திரன் நடிக்கும் 'சிங்கா'...

2026-04-20 16:07:46
news-image

நடிகர் விராட் கர்ணா நடிக்கும் 'நாக...

2026-04-20 14:57:17
news-image

ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 'மகாவதார் பரசுராம்'...

2026-04-20 14:52:51
news-image

நடிகை சாக்ஷி அகர்வால் நடிக்கும் 'தீயோர்...

2026-04-20 14:49:08
news-image

நடிகர் காளி வெங்கட் நடிக்கும் புதிய...

2026-04-20 14:12:39
news-image

மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் 'கரா' படத்தின்...

2026-04-20 14:08:08
news-image

விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்தின்...

2026-04-18 16:25:07
news-image

ரன்பீர் கபூர்- அலியா பட் -...

2026-04-18 16:22:09
news-image

சியான் 63' படத்திற்காக மீண்டும் இணையும்...

2026-04-18 16:19:40
news-image

சாதனை படைத்து வரும் நடிகர் நிகில்...

2026-04-18 16:03:24
news-image

கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்ட ராணவ் நடிக்கும்...

2026-04-18 15:58:37