செய் அல்லது செத்துமடி என்ற இக்கட்டான போட்டியில் தென்னாபிரிக்கா - பாகிஸ்தான்

Published By: Digital Desk 2

03 Nov, 2022 | 12:22 PM
image

(நெவில் அன்தனி)

ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் தோல்வி அடையாமல் இருக்கும் ஒரே ஒரு அணியான தென் அபிரிக்காவை மிக முக்கிய குழு 2 சுப்பர் 12 சுற்று போட்டியில் பாகிஸ்தான் இன்று எதிர்த்தாடவுள்ளது.

இப் போட்டி சிட்னி கிரிக்கெட் விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இன்று வியாழக்கிழமை (03) பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்தப் போட்டி இரண்டு அணிகளுக்கும் செய் அல்லது செத்துமடி என்ற ஒரு இக்கட்டான நிலையை தோற்றுவித்துள்ளது.

இப் போட்டியில் தென் ஆபிரிக்கா வெற்றிபெற்றால் 8ஆவது இருபது உலகக் கிண்ண அத்தியாயத்தில் முதலாவது அணியாக அரை இறதியில் விளையாட தகுதிபெறும். பாகிஸ்தான் வெற்றிபெற்றால் அதன் அரை இறுதிக்கான வாய்ப்பு சிறிது அதிகரிக்கும்.

இதுவரை தென் ஆபிரிக்கா சகலதுறைகளிலும் பிரகாசித்து 2 வெற்றிகள், ஒரு வெற்றிதோல்வியற்று முடிவுடன் 5 புள்ளிகளைப் பெற்று அணிகள் நிலையில் இரண்டாம் இடத்திலிருக்கிறது.

தென் ஆபிரிக்கா கடைசியாக விளையாடிய போட்டியில் இந்தியாவை வீழ்த்தியபோதிலும் இந்தியா நேற்றைய போட்டியில் அதிர்ஷ்டவசமமாக இயற்கை அன்னையின் தயவால் பங்களாதேஷை வெற்றிகொண்டதன் மூலம் 6 புள்ளிகளுடன் அணிகள் நிலையில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்த வருட இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இதுவரை சிறப்பாக விளையாடி வந்துள்ள தென் ஆபிரிக்கா இன்றைய தினம் பாகிஸ்தானிடம் இருந்து கடும் சவாலை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா மற்றும் ஸிம்பாப்வே ஆகிய அணிகளுடனான போட்டிகளில் கடைசி பந்துகளில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அதன் பின்னர் தனது முதலாவது வெற்றியை நெதர்லாந்துக்கு எதிராக பதிவு செய்திருந்தது. இந்த வெற்றி பாகிஸ்தானுக்கு சற்று நிம்மதியைக் கொடுத்துள்ளது.

பாகிஸ்தான் அரை இறுதி வாய்ப்பை பெறுவதாக இருந்தால் தென் ஆபிரிக்காவுடனும் பங்களாதேஷுட னும்   மிகப் பெரிய நிகர ஓட்ட வேக வித்தியாசத்தில் வெற்றிபெறவேண்டும். அதேவேளை, இந்தியா அல்லது தென் ஆபிரிக்காவின் போட்டி முடிவுகள் பாகிஸ்தானுக்கு சாதகமாக அமையவேண்டும்.

ஆனால், இன்றைய போட்டியில் பாகிஸ்தானுக்கு தென் ஆபிரிக்கா கடும் சவாலாக விளங்கப்போவது உறுதி.

பாகிஸ்தான் வெற்றிபெறுவதாக இருந்தால் அணித் தலைவர் பாபர் அஸாம், ஆரம்ப வீரர் மொஹமத் ரிஸ்வான், இப்திகார் அஹ்மத், ஷான் மசூத் ஆகியோர் துடுப்பாட்டத்தில் அபரிமிதாக பிரகாசிக்க வேண்டும். அத்துடன் ஷஹீன் ஷா அப்றிடி, ஷதாப் கான், ஹரிஸ் ரவூப் போன்றவர்கள் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட வேண்டும்.

தென் ஆபிரிக்காவின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ள  குவின்டன் டி கொக், ரைலி ரூசோவ், எய்டன் மார்க்ராம், டெவிட் மில்லர் ஆகியோர் இன்றைய போட்டியிலும் அசத்துவர் என நம்பப்படுகிறது.

அன்ரிச் நோக்கியா, லுங்கி நிகிடி, வெய்ன் பார்னல் ஆகிய வேகப்பந்துவீச்சாளர் பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர்களுக்கு சிரமத்தைக் கொடுப்பர் என கருதப்படுகிறது.

அணிகள்

பாகிஸ்தான்: மொஹமத் ரிஸ்வான், பாபர் அஸாம் (தலைவர்), மொஹமத் ஹரிஸ், ஷான் மசூத், இப்திகார் அஹ்மத், ஷதாப் கான், மொஹமத் நவாஸ், மொஹமத் வசிம், ஷஹீன் ஷா அப்றிடி, ஹரிஸ் ரவூப், நசீம் ஷா.

தென் ஆபிரிக்கா: குவின்டன் டி கொக், டெம்பா பவுமா (தலைவர்), ரைலி ரூசோவ், ஏய்டன் மார்க்ராம், டேவிட் மில்லர், ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், வெய்ன் பார்னல், கெஷவ் மஹராஜ், கெகிசொ ரபாடா, அன்ரிச் நோக்கியா,

முக்கிய செய்திகள்

icon-left
icon-right