பாரிஸ் மாஸ்டர்ஸில் ரபாயல் நடால் அதிர்ச்சி தோல்வி

Published By: Sethu

03 Nov, 2022 | 11:47 AM
image

பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் சுற்றுப்போட்டியின் இரண்டாவது சுற்றில், ஸ்பானிய வீரர் ரபாயல் நடால்  அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்று போட்டியொன்றில் ரபாயெல் நடாலை அமெரிக்காவின் டொமி போல் தோற்கடித்தார்.

36 வயதான ரபாயல் நடால் 22 கிராண்ட் ஸ்லாம் சம்பியன் பட்டங்களை வென்றவர். சர்வதேச ஆடவர் டென்னிஸ் தரவரிசையில் உலகின் முன்னாள் முதல் நிலை வீரரான அவர் தற்போது 2 ஆவது நிலை வீரராக் உள்ளார். 

இச்சுற்றுப்போட்டியில் ரபாயல் நடால் சம்பியனானால் அவர் ஆடவர் டென்னிஸ் தவரிசையில் மீண்டும் முதலிடத்தை அடையும் வாய்ப்பு இருந்தது.

டொமி போல் (AFP Photo)

எனினும், 2 ஆவது சுற்றில், நடாலை 3-6, 7-4, 6-1 விகிதத்தில் டொமி போல் வென்றார்.

இச்சுற்றுப்போட்டியிலிருந்த ரபாயல் நடால் வெளியேறியதால், மற்றொரு ஸ்பானிய வீரர் கார்லோஸ் அல்காரெஸ், உலகின் முதல் நிலை வீரராக இவ்வருடத்தை நிறைவு செய்யும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிப்பு

2023-09-26 11:18:45
news-image

ஆசிய விளையாட்டு விழா : கிரிக்கெட்டில்...

2023-09-25 15:20:39
news-image

ஆசிய ஒலிம்பிக் பேரவை கொடியின் கீழ்...

2023-09-25 11:40:58
news-image

உலகக் கிண்ண அணியில் ஹசரங்க, சமீர...

2023-09-25 10:49:38
news-image

வெளிமாவட்ட பெண்கள் பாடசாலைகளில் 3ஆம் இடம்பெற்று...

2023-09-25 10:30:29
news-image

மெக்ஸ்வெல் 2010இல் முன்வைத்த யோசனைக்கு அமைய...

2023-09-25 10:46:37
news-image

கில், ஐயர், யாதவ் துடுப்பாட்டத்தில் அசத்தல்,...

2023-09-25 09:54:57
news-image

ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு தங்கம்...

2023-09-25 07:01:59
news-image

ஆசிய விளையாட்டு விழாவை சீன ஜனாதிபதி...

2023-09-24 06:49:46
news-image

ஷமி 5 விக்கெட் குவியல், நால்வர்...

2023-09-23 10:53:17
news-image

19ஆவது ஆசிய விளையாட்டு விழா சினாவின்...

2023-09-23 10:25:11
news-image

அருணாச்சலப் பிரதேச வீராங்கனைகளுக்கு சீனா விசா...

2023-09-23 09:42:09