என்றும் இளமையாக இருக்க...

Published By: Devika

03 Nov, 2022 | 11:32 AM
image

சிலருக்கு வயது அதிகமாக இருந்தாலும், அவர்களை பார்த்தால், நிச்சயமாக தெரியாது. காரணம், அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவுகளும் உடற்­பயிற்சிகளும்தான். வாழ்க்கையில் சில விடயங்களை முறையாக கையாண்டால், இளமை என்றும் நீடித்திருக்கும்.

பதினாறு வயதுக்கு மேல், கொலா­ஜன் உற்பத்தி அதிக­மாக இருக்கும். அவைதான் சரு­மத்துக்கு நெகிழ்வுத் தன்­மையை கொடுத்து, சுருக்கங்கள் வராமல் பாதுகாக்கின்றன. 

வயதாகும்போது, இதன் உற்பத்தி குறையும். நீண்ட நாட்கள் தக்கவைக்க வேண்டும் என்றால், ப்ரோட்டின் மற்றும் நார்ச்சத்து கொண்ட உணவுகளை உண்­ணும்போது, கொலாஜன் உற்பத்தி அதி­கரிக்கும். சருமமும் வறட்சி குறையாமல் இருக்கும். எந்தெந்த உணவுகளில், புரோட்டி­னும் நார்ச்சத்தும் அதிகளவில் உள்­ளன என்பதையும் பார்ப்போம்.

பெர்ரி பழங்கள்: 
இவை அதிக அன்டி ஒக்சிடென்ட்களை கொண்டுள்ளன. நார்ச்சத்தும் அதிகமாக உள்ளன. இப்பழத்தை உண்டால், நச்சுகள் வெளியேறி, சருமம் அழகாக இருக்கும்.

நீர்: 
குடிநீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். சிலசமயம், தாகம் வந்தால் தவிர, நீரை நினைத்துக் கூட பார்ப்பதில்லை. அவ்வப்­போது, சிறிது இடைவெளி விட்டு நீர் அருந்த வேண்டும். நச்சுக்களும் வேண்டாத கழிவு­களும் வெளி­­யேற, நீர் அருமருந்து.

சிவப்பு திராட்சை: 
நிறைய அன்டி ஒக்சிடென்ட்கள் உள்ளன. இளமையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் சிவப்பு திராட்சைக்குண்டு. விட்டமின் சியில் இருக்கும் அன்டி ஒக்சிடென்ட்டை விட, இந்த சிவப்பு திராட்சையில் 50 மடங்கு அதிக­முள்ளது. இவை சருமத்தின் திசுக்களில் ஏற்­படும் பிரச்சினைகளை சீர் செய்து சரிப்படுத்தி­விடும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right