ஜப்பானிய மொழியைக் கற்கும் இளைஞர்களுக்கு ஜப்பானில் தொழில் வழங்குவது தொடர்பில் பேச்சு

Published By: Nanthini

03 Nov, 2022 | 11:29 AM
image

லங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி உள்ளிட்ட குழுவினர்  நேற்று (நவ 2) மலையகத்துக்கு விஜயம் செய்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் சந்திப்பினை மேற்கொண்டார். 

இ.தொ.கா. விடுத்த அழைப்பின் பேரில் தூதுவர், முதலில் கொட்டகலையில் உள்ள காங்கிரஸ் தொழிலாளர் ஸ்தாபனத்துக்கு வருகை தந்து, அங்கு இ.தொ.காவின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார். 

இதன்போது மலையக இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பில் பேசப்பட்டது. 

அதன் பிறகு ஹட்டனில் உள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு சென்ற தூதுவர், அங்கு இடம்பெறும் பயிற்சிநெறிகளையும், இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் கட்டி முடிக்கப்பட்ட நவீன கட்டடத் தொகுதியையும் பார்வையிட்டுள்ளார். 

இந்நிலையில் குறித்த தொழில்பயிற்சி நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜப்பானிய மொழி கற்கைநெறிகளை விருத்தி செய்வது தொடர்பாகவும், அங்கு பயிற்சி பெற்ற இளைஞர், யுவதிகளுக்கு ஜப்பானில் தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவது தொடர்பிலும், புலமை சார்ந்த தொழில்துறையை அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி உள்ளிட்ட குழுவினர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளோடு கலந்துரையாடினார்.

மேலும், அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலம் முதல் இன்று வரை இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நட்புறவு, இ.தொ.கா ஆற்றிவரும் சேவைகள் குறித்தும் ஜப்பான் தூதுவர் பாராட்டியுள்ளார்.

இச்சந்திப்பில் இ.தொ.கா பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், இ.தொ.கா தவிசாளரும்  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் மற்றும் கட்சியின் பிரதிநிதிகள், பிரதேச சபை  தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19