அம்பாறை லாஹுகல பகுதியில் நபரொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் அவரது வீட்டினுள் வைத்து இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

உயிரிழந்தவர் 60 வயதான முதியவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை குறித்த முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை என தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.