ஊடகவியலாளர்களுக்காக கடன் அடிப்படையில் மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்காக நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வின் மூலம் 2500 ஊடகவியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

இது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் நிதியமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.