மிருகக் காட்சிசாலையிலிருந்து 5 சிங்கங்கள் தப்பியோட்டம்: அவுஸ்திரேலியாவில் சம்பவம்

Published By: Sethu

02 Nov, 2022 | 04:00 PM
image

அவுஸ்திரேலியாவிலுள்ள மிருகக் காட்சிசாலை ஒன்றிலிருந்து 5 சிங்கங்கள் தப்பியோடிய சம்பவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

சிட்னியிலுள்ள தரோங்கா மிருகக் காட்சிசாலையிலிருந்து வளர்ந்த ஆபிரிக்க இனத்தைச் சேர்ந்த வளர்ந்த சிங்கமொன்றும் 4 குட்டிகளும் இன்று காலை தப்பிச் சென்றன.

இதையடுத்து மிருகக் காட்சிசாலை உடனடியாக முடக்கப்பட்டது. பொலிஸாரும், மிருகங்களைக் கையாளும் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.

எனினும் பின்னர் மேற்படி சிங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றின் கூண்டுக்கு கொண்டுவரப்பட்டன.

சிங்கக்குட்டி ஒன்றுக்கு மயக்கமருந்து செலுத்த வேண்டியநிலை ஏற்பட்டதாக மிருகக் காட்சிசாலை பணிப்பாளர் சிமோன் டஃபி,. ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

சிங்கங்கள்  எவ்வாறு தப்பிச் சென்றன என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படுகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய பாதுகாப்புப் படை வீரரை கைதுசெய்தது...

2025-04-24 21:22:34
news-image

இந்திய விமானங்களிற்கு தனது வான்எல்லையை மூடியது...

2025-04-24 17:17:11
news-image

"பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகளை உடனடியாக நிறுத்தி...

2025-04-24 17:00:45
news-image

'அவர் எங்களின் கவசம் - எங்களின்...

2025-04-24 15:26:23
news-image

பஹல்காம் பயங்கரவாதிகள் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு...

2025-04-24 14:31:49
news-image

யாரும் ஜம்மு-காஷ்மீருக்கு செல்ல வேண்டாம்’ -...

2025-04-24 13:14:51
news-image

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அதிரடி :...

2025-04-24 07:18:18
news-image

துருக்கியை தொடர்ச்சியாக தாக்கியுள்ளபூகம்பங்கள் - சேதவிபரங்கள்...

2025-04-23 16:37:49
news-image

துருக்கியில் பூகம்பம்

2025-04-23 16:12:35
news-image

ரஸ்யாவில் ஆளில்லா விமானங்களை தயாரிக்கும் நடவடிக்கைகளில்...

2025-04-23 14:57:29
news-image

காஷ்மீர் தாக்குதல்: திருமணம் நடந்து 3...

2025-04-23 14:52:20
news-image

பாலஸ்தீன ஆதரவு நடவடிக்கைகளிற்காக மாணவர்களை தடுத்துவைத்திருப்பது...

2025-04-23 14:03:20