அரச நிறுவனங்களால் இரு காலாண்டுகளில் மாத்திரம் 986 பில்லியன் ரூபா நஷ்டம் - எரான்

Published By: Digital Desk 2

02 Nov, 2022 | 04:43 PM
image

(எம்.மனோசித்ரா)

அரச நிறுவனங்களால் கடந்த ஆண்டு ஏற்பட்ட நஷ்டம் 286 பில்லியன் ரூபாவாகும். ஆனால் இவ்வாறு முதலிரு காலாண்டுகளில் மாத்திரம் 986 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமையை சமாளிப்பதற்கு அரசாங்கத்திற்கு மேலும் பணத்தை அச்சிட வேண்டிய நிலைமையே ஏற்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாடு இவ்வாறு பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள போதிலும், ஊழல் - மோசடிகள் தொடர்ந்தும் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றன. பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நன்மை தரும் வகையில், அடுத்த வருடத்திற்கான வரவு - செலவு திட்டத்தில் அவசியமான விடயங்களுக்கு மாத்திரம் முன்னுரிமையளிக்கப்பட வேண்டும்.

பொருளாதார நெருக்கடிகளை தணிப்பதற்கு வருமானத்தை அதிகரிப்பது மாத்திரம் தீர்வாகாது. மாறாக செலவுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

பாதுகாப்பு , கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய சேவைகளுக்கு மாத்திரம் வரவு - செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட வேண்டும். ஏனைய துறைகளுக்கான செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.

கடந்த ஆண்டு அரச நிறுவனங்களினால் ஏற்பட்ட நஷ்டம் 286 பில்லியன் ரூபாவாகும். ஆனால் இவ்வாறு முதலிரு காலாண்டுகளில் மாத்திரம் 986 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனை சரி செய்வதற்கு அரச சொத்துக்களை விற்பது தீர்வாகாது. மாறாக முறையான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

எவ்வாறிருப்பினும் இந்த நிலைமையை சமாளிப்பதற்கு அரசாங்கத்திற்கு மேலும் பணத்தை அச்சிட வேண்டிய நிலைமையே ஏற்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்னை மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அவசியம்

2025-01-24 09:16:05
news-image

துறைமுகத்தில் சிக்கிக்கொண்டிருக்கும் 3 ஆயிரம் கொள்கலன்களை...

2025-01-24 09:20:04
news-image

10ஆவது பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்காக...

2025-01-24 09:18:16
news-image

கல்கிஸ்ஸ பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர்...

2025-01-24 09:05:29
news-image

பெய்ரா ஏரியில் இறந்த நிலையில் கரையொதுங்கிய...

2025-01-24 08:12:12
news-image

முன்னாள் ஜனாதிபதிளுக்கு அரச இல்லங்களை விட்டு...

2025-01-24 09:17:25
news-image

இன்றைய வானிலை 

2025-01-24 06:15:28
news-image

கிரேன்பாஸில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற...

2025-01-24 03:51:07
news-image

பயணிகள் பேருந்தும், கொள்கலன் லொறியும் மோதி...

2025-01-24 03:41:09
news-image

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு விலையை 450...

2025-01-24 03:32:58
news-image

அரச அதிகாரிகளுக்கு, தேவையான தகமையுடையவருக்கு வழங்கப்படும்...

2025-01-24 03:54:36
news-image

சுவாசநோய் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு -...

2025-01-24 03:16:45