அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் மீள்பரிசீலனை செய்யுமாறு  அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

புதிய வரவு செலவுத் திட்டத்தினால்  நாட்டுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.

அரச ஊழியர்கள், தொழிற்துறையினர் மற்றும் நாட்டுக்கு இதன் மூலம் பாதிப்பு ஏற்படும்.

குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி நேரடியாக அவதானம் செலுத்துமாறு குறித்த கடிதத்தில் கோரியுள்ளது.