யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், 40 வயதுடைய பெண்ணொருவரும், 35 வயதுடைய ஆணொருவரும் நேற்று செவ்வாய்க்கிழமை (நவ 1) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைதான இருவரிடம் இருந்து 20 லீட்டர் கசிப்பு, 50 லீட்டர் கோடா, கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் உபகரணங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
குறித்த வீட்டில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை நடைபெறுவதாக யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், அவ்வீட்டினை சுற்றிவளைத்த புலனாய்வுப் பிரிவினரால் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன், பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட இருவரும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM