விஷ்ணு விஷால் நடிக்கும் 'கட்டா குஸ்தி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Published By: Digital Desk 2

02 Nov, 2022 | 09:45 PM
image

தயாரிப்பாளரும், நடிகருமான விஷ்ணு விஷால், தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான 'மாஸ் மகாராஜா' ரவி தேஜாவுடன் இணைந்து நடித்திருக்கும் :கட்டா குஸ்தி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் தனுஷ் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ' கட்டா குஸ்தி '. இதில் கதையின் நாயகர்களாக தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகர் மாஸ் மகாராஜா ரவி தேஜாவும், நடிகர் விஷ்ணு விஷாலும் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார்.  மல்யுத்த விளையாட்டுப் போட்டியை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் ரவி தேஜா ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தயாரித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அண்மையில் முழுமையாக நிறைவடைந்தது. தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர் விஷ்ணு விஷால், குஸ்தி எனப்படும் மல்யுத்த விளையாட்டு வீரராக தோன்றி ரசிகர்களை ஈர்த்திருக்கிறார்.

விஷ்ணு விஷாலின் இரண்டாவது திருமணத்திற்கு பிறகு தயாரித்து வெளியிடும் 'கட்டா குஸ்தி' திரைப்படம், வசூல் ரீதியாக தெலுங்கிலும், தமிழிலும் பாரிய வெற்றியைப் பெறும் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சார்லி குணச்சித்திர வேடத்தில் கலக்கும் 'அரிமாபட்டி...

2024-02-29 19:08:58
news-image

பான் இந்திய திரைப்படமாக உருவாகும் நடிகர்...

2024-02-29 19:05:59
news-image

ஊர்வசி நடிக்கும் 'ஜே. பேபி' படத்தின்...

2024-02-29 19:02:14
news-image

விஜய் சேதுபதி வெளியிட்ட 'அக்காலி' பட...

2024-02-29 18:57:41
news-image

சந்தானம் நடிக்கும் 'இங்க நான் தான்...

2024-02-29 18:54:27
news-image

சீட் எட்ஜ் திரில்லராக உருவாகி இருக்கும்...

2024-02-27 15:11:49
news-image

கல்லூரி இளைஞர்களுக்கான கதை 'போர்'

2024-02-27 14:10:05
news-image

மல்யுத்த வீரராக நிஹார் நடிக்கும் 'ரெக்கார்ட்...

2024-02-26 16:57:52
news-image

நேச்சுரல் ஸ்டார்' நானி' நடிக்கும் 'சூர்யா'ஸ்...

2024-02-26 14:45:53
news-image

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'இடி...

2024-02-26 13:44:48
news-image

வித்தைக்காரன் - விமர்சனம்

2024-02-24 18:35:42
news-image

இயக்குநர் மிஷ்கின் வெளியிட்ட 'டபுள் டக்கர்'...

2024-02-24 18:32:29