2022 உலக சிறுவர் தினத்தன்று பிறந்த பிள்ளைகளின் பெற்றோருக்கு ஒரு மில்லியன் மதிப்பிலான இலவச ஆயுள் காப்புறுதியை வழங்கியது SLIC

Published By: Digital Desk 2

02 Nov, 2022 | 01:57 PM
image

2022 ஒக்டோபர் 1 ஆம் திகதி வரும் உலக சிறுவர் தினத்தன்று நாடளாவிய ரீதியில்  பிறக்கும் ஒவ்வொரு குழந்தையினது பெற்றோருக்கும் ரூ. 1 மில்லியன் மதிப்புள்ள இலவச ஆயுள் காப்பீட்டை SLIC வழங்குகின்றது.

2022 ஒக்டோபர் 1 ஆம் திகதியன்று நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளையும் உள்ளடக்கி காப்புறுதியின் முக்கியத்துவம் என்ற தகவலை எடுத்துச் செல்லும் வகையில் இந்நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

2022 ஒக்டோபர் 1 ஆம் திகதியன்று வரும் உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு ஸ்ரீ லங்கா இன்ஷ{ரன்ஸ்; - Sri Lanka Insurance (SLIC) மேலும் இன்னுமொரு பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டத்தினை முன்னெடுத்துள்ளது. இதன் மூலம் 2022, ஒக்டோபர் 1 ஆம் திகதியன்று நாடளாவிய ரீதியில்  பிறக்கும் அனைத்து குழந்தைகளினதும் பெற்றோருக்கும் அக்குழந்தைகளின் எதிர்கால பாதுகாப்பினை உறுதிப்படுத்திடும் வகையில் ரூ. 1 மில்லியன் பெறுமதியிலான இலவச ஆயுள் காப்புறுதியினை  SLIC வழங்குகின்றது. 

2022, ஒக்டோபர் 1ஆம் திகதியன்று நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளையும் உள்ளடக்கிய வகையில் இந்நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய காப்புறுதியாளர்கள் என்ற வகையில் இந்த பெருநிறுவன சமூக பொறுப்புணர் திட்டத்தினை முன்னெடுப்பதற்கான நோக்கமாக தேசத்தின் குடும்பங்கள் மற்றும் சமூகங்களைப் பாதுகாப்பதன் மூலம் தேசத்திற்கான  SLIC யின் கடமையை நிறைவேற்றுகிறது.  

கொழும்பு கார்சல்; மருத்துவமனையில் பெற்றோருக்கு இப்புதிய காப்புறுதித் திட்டத்தினை கையளித்திடும் நிகழ்வின் போது  SLIC  யின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திரு. சந்தன எல்.அலுத்கம இத்தனித்துவமான முன்முயற்சி குறித்து கருத்து தெரிவிக்கையில், 

“இத்தேசத்தின் பிள்ளைகளுக்கு பாதுகாப்பானதோர் எதிர்காலத்தினை உருவாக்கிக் கொடுப்பதே  SLIC யின் முதன்மையான நோக்கம் ஆகும். அதே வேளை பெற்றோருக்கும்; எமது ஆதரவினை தொடர்ந்தும் வழங்கிடுவோம்.  SLIC என்பது மக்களை மையமாகக் கொண்ட காப்புறுதி வழங்குநராகும், மேலும் அது தனது வாக்குறுதியை தொடர்ந்து வழங்கும்

ஒரு தேசிய காப்புறுதியாளராக, தேசத்தினதும், அத்தேசத்தின் மக்களினதும் பொறுப்பினை ஏற்கும் வகையில், அனைவருக்கும் காப்புறுதி என்ற தகவலை  எடுத்துச் செல்கின்றது. மேலும் எதிர்கால தலைமுறையினரை பாதுகாப்பதில் மற்றும் வளர்ப்பதில் அதிக ஆர்வத்தினைக் கொண்டுள்ளது. ஊளுசு முன்முயற்சிகள் மூலம் இலங்கை மக்களின் வாழ்வினை மேம்படுத்த முடியும் என்பதை  SLIC உறுதியாக நம்புகின்றது. மேலும் இந்த அணுகுமுறையானது அதன் வணிக மூலோபாயத்தின் முக்கிய அம்சமும் ஆகும்.  SLIC எப்போதும் சிறுவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்தினை பாதுகாப்பதில் முன்னணியில் இருந்திடும். அதிலும் குறிப்பாக பெற்றோரின் பாதுகாப்பினையும் அரவணைப்பினையும் இழந்த பிள்ளைகளின் பாதகாப்பில் அதீத கவனத்தினை செலுத்துகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 SLIC யின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சீ. பெரேரா இது குறித்து தமது கருத்துக்களை தெரிவிக்கையில்,

“எமது தேசத்தின் எதிர்காலம் சிறுவர்களே, மேலும் அவர்களது பெற்றோருக்கு இலவச ஆயுள் காப்புறுதியை வழங்குவதில் நாம் பெருமகிழ்ச்சியடைகின்றோம். அதிலும் குறிப்பாக உலக சிறுவர் தினமான 2022 ஒக்டோபர் 1 ஆம் திகதியன்று இலங்கையில் பிறந்த அனைத்து பிள்ளைகளினதும் பெற்றோருக்கும் இக்காப்புறுதியை வழங்குவதில் நாம் பெருமையடைகின்றோம்.  SLIC யின் இந்த முன்னெடுப்பானது பிள்ளைகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் அவர்களது வாழ்க்கையில் சிறந்த ஆரம்பத்தினை ஏற்படுத்திக் கெர்டுக்கும் என நம்புகின்றோம். மேலும் எப்பொழுதும் எம் தேசத்தின் மிகச் சிறந்த சொத்துக்களான எமது பிள்ளைகளின் வளர்ச்சிக்காகவும் மற்றும் பாதுகாப்பான நல்வாழ்வுக்காகவும்  SLIC உறுதியாக செயற்படும்.” எனத் தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டின் முதல் அறையாண்டில் ரூ. 7.7 பில்லியன் வரிக்கு முன்னரான இலாபத்தை பதிவு செய்தது. 2022 ஆம் ஆண்டில் முதல் அறையாண்டில் சிறந்த செயற்திறன் கொண்ட மிகவும் இலாபகரமான அரச நிறுவனங்களில் ஒன்றாகவும் ஸ்ரீ லங்கா இன்ஷ+ரன்ஸ் இடம் பிடித்திருந்தது. மேலும் ரூ. 21 பில்லியன் ஒருங்கிணைந்த மொத்த எழுதப்பட்ட பிரீமியத்துடன் ; (GWP) வலுவான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. இது 13.1 சதவீத வளர்ச்சியாகும்.  SLIC ஆனது தொடர்ந்தும் 5 ஆவது ஆண்டிலும் Brand Finance இன் ‘Most Valuable General Insurance Brand’ மற்றும் ‘Most Loved Insurance Brand’  ஆகிய விருதுகளை சுவீகரித்துக் கொண்டுள்ளது. 

SLIC இனைப் பற்றி

1962 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Sri Lanka Insurance Corporation ஆனது ரூ. 268 பில்லியனுக்கும் அதிகமான நிர்வகிக்கப்பட்ட சொத்துத் தளத்தினையும் மற்றும் ரூ. 152 பில்லியன் ஆயுள் காப்புறுதி நிதியத்துடன் விளங்கும் இலங்கையின் மிகப்பெரிய அரசுக்கு சொந்தமான காப்புறுதி நிறுவனமாக 60 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. அதன் நீண்ட கால நிதி ஸ்திரத்தன்மை மற்றும் நிலைத்தன்மைக்காக AA (lka) என்ற பிட்ச் தரச்சான்றைப் பெற்ற முதல் மற்றும் ஒரே உள்நாட்டு காப்புறுதியாளராகவும்; விளங்குகின்றது. மேலும் தொடர்ந்தும் 5 ஆவது ஆண்டிலும் Brand Finance  இன் ‘Most Valuable General Insurance Brand’  மற்றும் ‘Most Loved Insurance Brand’ ஆகிய விருதுகளை சுவீகரித்துக் கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு காப்புறுதி சேவைகளை வழங்குவதில் தொடர்ந்தும் புத்தாக்கங்களை உருவாக்கி வருவதுடன் வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்ட நிறுவனமாக இந்த தேசிய காப்புறுதி நிறுவனம் காணப்படுகின்றது. மேலும் 190க்கும் அதிகமான கிளைகள் மற்றும் வாடிக்கையாளர் சேவை நிலையங்களைக் கொண்ட விரிவான வலையமைப்பின் மூலம் தமது வாடிக்கையாளர்களுக்கு உன்னதமான சேவைகளை புரிந்து வருகின்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57