பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி அரசாங்கம் அடக்குமுறையை பிரயோகிக்கிறது - டிலான் பெரேரா

Published By: Digital Desk 5

02 Nov, 2022 | 01:47 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி மக்கள் போராட்டத்திற்கு எதிரான அடக்குமுறையை அரசாங்கம் பிரயோகிக்கிறது.மக்களின் பலத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெகுவிரைவில் விளங்கிக்கொள்வார் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் காங்கிரஸ் காரியாலயத்தில் புதன்கிழமை (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள திட்டங்களை தடுப்பதற்காகவே எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுப்படுவதாக அரசாங்கம் குறிப்பிடுவது நகைப்புக்குரியது.

பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானங்கள் நாட்டு மக்களை மேலும் பொருளாதார நெருக்கடிக்குள் உள்ளாக்கியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் நிதியத்தை பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கம் நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை அமுல்படுத்தியுள்ளது.பிரதான நிலை கடன்மறுசீரமைப்பு ஜனவரி மாதம் வரை தாமதப்படுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.மக்கள் போராட்டத்தை தடுப்பதற்காக அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த ஏப்ரல் மாதம் அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ ஊரடங்கு சட்டம்,அவசரகால சட்டத்தை அமுல்படுத்திய போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்தல்,ஜனநாயகத்திற்கு எதிரான அடக்குமுறையை நிறுத்தல் உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து நாட்டு மக்கள் தற்போது போராட்டங்களில் ஈடுப்படுகிறார்கள்.பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி மக்கள் போராட்டத்தை அரசாங்கம் முடக்குகிறது.மக்களாணை இல்லாத ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்கள் பலத்தை வெகுவிரைவில் விளங்கிக் கொள்வார்.இடம்பெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் நாட்டு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38