எதிர்க்கட்சி தலைவரின் செயற்பாடுகள் அருவருப்பாக உள்ளன - ஹரின் பெர்னாண்டோ

Published By: Digital Desk 3

02 Nov, 2022 | 01:51 PM
image

(எம்.மனோசித்ரா)

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனித்து போராட முடியாது என்ற இயலாமை காரணமாக, முன்னிலை சோசலிச கட்சியுடன் இணைந்து செயற்படுகின்றார்.

அவரது இந்த செயற்பாடு அருவருப்பாகவுள்ளது. ஒரு சிலரது அரசியல் தேவைகளுக்காக மீண்டும் நாடு வீழ்ச்சியடைவதற்கு இடமளித்து விட வேண்டாம் என்று மக்களைக் கேட்டுக் கொள்வதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இது போன்ற ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு, எதிர்மறையான செய்திகளை உருவாக்கி நாட்டை மீண்டும் வீழ்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றால், அந்த பொறுப்பை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவே ஏற்க வேண்டும் என்றும்  அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

சுற்றுலாத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் புதன்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, முன்னிலை சோஷலிச கட்சியுடன் இணைந்து செயற்படுவது அருவருப்பாகவுள்ளது. தேர்தலில் மாத்திரமே நான் ஜனாதிபதியாவேன் என்று எந்தத் தலைவர்களும் கூற மாட்டார்கள். தற்போது நாட்டில் இனவாதமோ , மதவாதமோ இல்லை. அனைவரும் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு முயற்சிக்கின்றனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சித்தியடைந்துள்ளார். காரணம் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இந்த சவாலை ஏற்பதற்கு அனைவரும் அஞ்சினர்.

முன்னிலை சோஷலிசக் கட்சி மீது அண்மையில், பல்கலைக்கழகத்தில் பகிடிவதைகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. தற்போது அவர்களுடன் இணைந்து செயற்படும் எதிர்க்கட்சி தலைவர் இதனை விரும்புகின்றாரா?

எனது முன்னாள் தலைவர் வீழ்ந்துள்ள இடம் கவலைக்குரியதாகவுள்ளது. என்னையும் , மனுஷ நாணயக்காரவையும் தவளைகள் என்று எதிர்க்கட்சி தலைவர் விமர்சித்தார். கிணற்றுக்குள் இருக்கும் வரை மாத்திரமே நாம் தவளைகளாக இருந்தோம். தற்போது கிணற்றிலிருந்து வெளியேறியுள்ளோம். தற்போது கண்ணாடி முன் சென்று பார்த்தால் யார் தவளை என்பதை எதிர்க்கட்சி தலைவருக்கு உணர முடியும்.

ஒரு சிலரது அரசியல் தேவைகளுக்காக மீண்டும் நாடு வீழ்ச்சியடைவதற்கு இடமளித்து விட வேண்டாம் என்று மக்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.

மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை நாட்டுக்கு அழைத்து வரும் எமக்கு நெருக்கடியை ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம். எதற்காக இந்தளவு அதிகார பேராசை?

அழைத்து பதவியை வழங்கிய போது அதனை ஏற்காமல், தற்போது தனித்து போராட முடியாது என்பதால், வெட்கமின்றி பிரிதொரு தரப்பினருடன் இணைந்து முன்னெடுக்கும் இந்த செயற்பாடு கீழ்தரமானதாகும். நாடு மீண்டும் வீழ்ச்சியடைந்தால் , அந்த பொறுப்பை எதிர்க்கட்சி தலைவரே ஏற்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதன்முறையாக தேர்தலில் வாக்களித்ததால் இலங்கை தமிழ்...

2024-04-20 11:53:28
news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09