மட்டக்களப்பு, ஏறாவூர் புன்னைக்குடா கடற்கரையில் நேற்று  மாலை, பொழுது போக்கிற்காகச் சென்று நீராடிக் கொண்டிருந்த வேளையில் கடல் அலையில் சிக்கி காணாமல்போன மாணவர்கள் இருவரில் ஒருவரின் சடலம் இன்று பிற்பகல் மீனவர்களின் வலையில் சிக்கியபோது மீட்கப்பட்டது.

ஏறாவூர் அலிகார் தேசிய கல்லூரியில் உயர்தரத்தில் முதலாம் ஆண்டு கலைப் பிரிவில் கற்கும் ஏறாவூரைச் சேர்ந்த அல்மஹர்தீன் பர்ஹான் (வயது 17) எனும் மாணவனின் சடலமே கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் மீனவரின் வலையில் சிக்கி மீட்கப்பட்டது.

ஏறாவூர் அலிகார் தேசிய கல்லூரியில் உயர்தரத்தில் முதலாம் ஆண்டு கலைப் பிரிவில் கற்கும் பங்குடாவெளியைச் சேர்ந்த சிவகுமார் சிவதர்ஷன் (வயது 17) என்பரின் சடலத்தை இன்னமும் மீனவர்களும் கடற்படையினரும் தேடி வருகின்றனர்.

அலைகளால் இழுத்துச் செல்லப்பட்ட சேகுதாவூத் அக்ரம் (வயது 17) என்ற மாணவன் கடல் மீனவர்களால் காப்பாற்றப்பட்ட நிலையில் நேற்று  இரவு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.