இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் சசிகுமார் கதாநாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'நான் மிருகமாய் மாற' எனும் படத்தின் முன்னோட்டம் கடந்த வாரம் வெளியானது. இதனை நடிகர் ஆர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
'கழுகு' பட இயக்குநர் சத்யா சிவா இயக்கத்தில் தயாராகியுள்ள புதிய திரைப்படம் 'நான் மிருகமாய் மாற'.
இதில் சசிகுமார் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஹரிப்ரியா நடித்திருக்கிறார். இவர்களுடன் விக்ராந்த், மதுசூதன ராவ், அப்பானி சரத், சூப்பர் குட் கண்ணன், கே.எஸ்.ஜி. வெங்கடேஷ், நடிகை துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ராஜா பட்டாச்சார் ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். ஒலியை மையப்படுத்தி அக்ஷன், த்ரில்லராக தயாராகியுள்ள இந்த திரைப்படத்தை செந்தூர் பிலிம் இன்டர்நெஷனல் எனும் பட நிறுவனத்தின் சார்பில் டி.டி. ராஜா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.
அனைத்து படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்து, வெளியீட்டுக்கு தயாராகியுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
படத்தின் முன்னோட்டம் இன்றைய பொதுமக்கள் சந்திக்கும் பல்வேறு சமூகவியல் ரீதியிலான அழுத்தங்களை உயிர்ப்புடன் காண்பித்து, அதில் தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றும் ஒரு சாதாரண குடும்பத் தலைவனின் மனநிலையையும், போராட்டத்தையும் எடுத்துரைக்கிறது.
கறுப்பு, வெள்ளை காட்சியாக வெளியான ட்ரெய்லரின் தொடக்கத்திலேயே நீண்டதொரு வசனத்தோடு ரத்தம் தெறிப்பது போல் காட்டப்படுவது ரசிகர்களை மிரட்டியுள்ளது.
"100 கோடி மனிதனுக்கு ஆயிரம் கோடி ஆசை, எளியோரை வலியோர் வாட்டினால், வலியோரை எளியோர் வாட்டும். இத சொன்னவன் கையில கெடச்சான்..." என்கிற வசனம் அருமை.
இந்த படம் நவம்பர் மாதத்தில் மிக விரைவிலேயே வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM