சிறுவன் கடித்து பாம்பு மரணம் : இந்தியாவில் சம்பவம் !

Published By: Digital Desk 2

02 Nov, 2022 | 04:19 PM
image

இந்திய சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூரில் எட்டு வயது சிறுவன் ஒருவன் தன்னை கடித்த நாகப்பாம்பை திரும்பி கடித்ததில் நாகப்பாம்பு இறந்துள்ள விநோதம் நடந்துள்ளது. 

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூருக்கு வடகிழக்கே 350 கிமீ தொலைவில் உள்ள ஜாஷ்பூர் மலைவாழ் பகுதியில் பாஹடி கோர்வா என்ற பழங்குடியின மக்கள் வாழ்ந்து வரும் மாவட்டமாகும், இந்த பகுதியில் 200 வகையான பாம்புகள் காணப்படுவதால், இந்த பகுதியை உள்ளூர் மக்கள் "நாகலோகம்" (பாம்புகளின் இருப்பிடம்) என்றும் அழைக்கப்படுகிறது.

இந்நிலையில், ஜாஷ்பூர் மாவட்டம் பந்தர்பாத் கிராமத்தில் தீபக் என்ற 8 வயது சிறுவன் திங்கள்கிழமை தனது வீட்டின் பின்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது நாகப்பாம்பு ஒன்று கடித்துள்ளது.

இதையடுத்து தன்னை கடித்த அந்த நாகப்பாம்பை சிறுவன் வளைத்துப் பிடித்து தனது கையில் சுற்றிக் கொண்டு அந்த பாம்பை கடித்துள்ளான். இதில் அந்த நாகப்பாம்பு இறந்துள்ள விநோதம் நடந்துள்ளது. 

இதையடுத்து பயந்துபோன அவரது குடும்பத்தினர் அந்த சிறுவனை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

தன்னை கடித்த பாம்பை சிறுவன் கடித்தான் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், உடனடியாக " சிறுவனுக்கு பாம்பு விஷம் முறிவு ஊசி செலுத்தப்பட்டு சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் நாள் முழுவதும் கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.

தற்போது சிறுவன் பூர்ண நலமாக இருப்பதை அடுத்து வீட்டு அனுப்பப்பட்டதாக" மருத்துவ அதிகாரி டாக்டர் ஜெம்ஸ் மின்ஜ் கூறினார்.

இதுகுறித்து அந்த சிறுவன் கூறுகையில், “பாம்பு என் கையை கடித்தது. நான் மிகுந்த வலி வேதனையில் இருந்தேன். பின்னர் என்னை கடித்த அந்த பாம்பை வளைத்துப் பிடித்து கையில் சுற்றிக்கொண்டு  இரண்டு முறை கடித்தேன். இது அனைத்தும் ஒரு நொடியில் நடந்தது, ”என்று கூறினார்.

“பாம்பு கடித்த எந்த அறிகுறிகளும் தீபக்கு தெரியவில்லை மற்றும் பாம்பு கடித்தபோது விஷம் சிறுவனின் உடலில் பரவததால் விரைவாக குணமடைந்தார், ஆனால் விஷம் வெளியேறவில்லை. இத்தகைய பாம்புக்கடிகள் வலிமிகுந்தவை மற்றும் கடித்த இடத்தைச் சுற்றி சில அறிகுறிகளை மட்டுமே காட்டக்கூடும்" என்று பாம்பு நிபுணர் கைசர் ஹுசைன் கூறினார்.

மூத்த பத்திரிக்கையாளர் ரமேஷ் ஷர்மா கூறுகையில், இத்தகைய வழக்குகள் அரிதானவை. ஜாஷ்பூர் மாவட்டத்தில் இதுபோன்ற சம்பவத்தை நான் பார்த்ததில்லை. 

இந்த பகுதியில் பாம்பு கடித்து அவ்வப்போது உயிரிழப்புகள் நிகழ்வதுண்டு. இது வினோதமானவை என்று கூறினார். 

பாம்பை சிறுவன் கடித்து பாம்பு இறந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்