அணுகுண்டுகளை யுக்ரைன் தயாரிப்பதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அதுதொடர்பான விசாரணையை ஐ.நா. அணுசக்தி ஆணையம் ஆரம்பித்துள்ளது.
நேட்டோ கூட்டமைப்பில் சேர யுக்ரைன் முயற்சி மேற்கொண்டதால், அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரியில் போர் தொடுத்தது.
யுக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா களத்தில் இறங்காவிட்டாலும், உக்ரைனுக்கு ஏராளமான ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் அணு ஆயுதங்களை யுக்ரைன் தயாரிப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
பிரிட்டன், பிரான்ஸ், துருக்கி நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்களுடன் கடந்த வார இறுதியில் உரையாடிய ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கேய் ஷாய்கு, தங்கள் மீது‘டர்ட்டி பாம்ஸ்’ எனப்படும் நாசகாரஆயுதங்களை (அணு ஆயுதங்கள்) கொண்டு தாக்குதல் நடத்த யுக்ரைன் ஆயத்தமாகி வருவதாக குற்றஞ்சாட்டினார். அணுக்கதிர் வீச்சுப் பொருள்களால் ஆன அந்த ஆயுதங்கள் மூலம் போரை மிகப் பெரிய அழிவுப் பாதைக்கு கொண்டு செல்ல யுக்ரைன் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
ரஷ்யாவின் இந்த குற்றச்சாட்டுக்கு யுக்ரைன் மறுப்பு தெரிவித்தது.
இந்நிலையில் ரஷ்யாவின் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை கீவ் நகரில், ஐ.நா. அணுசக்தி ஆணையம் நேற்று ஆரம்பித்துள்ளது. சர்வதேச அணு சக்தி ஆணையத்தின் தலைவர் ரஃபேல் குரோஸி தலைமையில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த விசாரணை நிறைவுறும் என்று ரஃபேல் குரோஸி தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM