ஆர்ப்பாட்டங்கள், அவசர நிலைமைகளை கையாளல் : பொலிஸுக்கு ஆலோசனை வழங்க சட்ட மா அதிபரின் கீழ் சிறப்பு குழு

Published By: Digital Desk 3

02 Nov, 2022 | 09:26 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அவசர நிலைமைகளின் போது பொலிஸாரின் செயற்பாட்டுக்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்க, சட்ட மா அதிபரின் நேரடி கட்டுப்பாட்டில்  சட்ட மா அதிபர் திணைக்களத்தில் சிறப்பு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபரின் கோரிக்கைக்கு அமைய, சட்ட மா அதிபர் சஞ்சய் ராஜரட்ணத்தின் நேரடி மேற்பார்வையில் செயற்படும் வண்ணம், சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி பிரியந்த நாவான , சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் டிலான் ரத்நாயக்க பிரதி சொலிசிட்டர் ஜெனரால் லக்மாலி கருணாநாயக்க ஆகியோரை உள்ளடக்கியதாக இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு, சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் பிரியந்த நாவானா கையெழுத்திட்டு தொலைபேசி இலக்கங்களையும் உள்ளடக்கி விஷேட கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.

அதன்படி, பொலிஸார் எந்தவொரு அவசர நிலைமையின் போதும், குறித்த மூன்று சட்ட அதிகாரிகளையும் அவரகளது கையடக்கத் தொலைபேசிக்கு அழைத்து உடனடியாகவே ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த  ஏப்ரல் 12 ஆம் திகதி மற்றும் ஆகஸ்ட் 11 ஆம் திகதி ஆகிய தினங்களில் பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரத்ன முன் வைத்த கோரிக்கைகளுக்கு அமையவே, இந்த உடனடி ஆலோசனை மற்றும் ஒத்துழைப்பு  வழங்கும் குழு சட்ட மா அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் மா அதிப எஸ். எம். விக்ரமரத்னவால் , சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான  தேசபந்து தென்னகோன், பிரியந்த வீரசூரிய,  சஞீவ தர்மசேன, டப்ளிய்யூ. கே. ஜயலத்,  ராஜித்த ஸ்ரீ தமிந்த, எப்.யூ. பெர்ணான்டோ,  லலித் பத்திநாயக்க, அஜித் ரோஹன,  கே.பி.எம். குணரத்ன ( 9 மாகாணங்கலுக்கும் பொறுப்பானவர்கள் ) ஆகியோருக்கு அரிவித்துள்ளார்.

அதன்படி நாட்டின் எந்தவொரு பகுதியிலும் ஏதாவது ஆர்ப்பாட்டங்கள், அவசர நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில் பொலிஸார் நேரடியாக, உடனடியாக குறித்த மூன்று சட்ட அதிகாரிகலின் அலஓசனைகலைப் பெற்றுக்கொள்ள முடியும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59