( எம்.எப்.எம்.பஸீர்)
செல்வந்தர்களை மையப்படுத்தி கோடிக்கணக்கான பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகோ குறூப் ப்ரைவட் லிமிடட் நிறுவனத்தின் உரிமையாளர் எனக் கூறப்படும் திலினி பிரியமாலி தொடர்பிலான விசாரணைகளின் ஒரு அங்கமாக, கடவத்தை சிறி அரந்தக சமாதி அரண விகாரையில் வசிக்கும் பொரளை சிறிசுமன தேரர் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை (நவ.1 ) மாலை அவரைக் கைது செய்ததாகவும், அவரிடம் சி.ஐ.டி.யின் சிறப்புக் குழுவினர் விசாரணைகளை முன்னெடுக்கும் நிலையில், இன்று (2) கோட்டை நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.
திலினி பிரியமாலி விவகாரத்தில், வர்த்தகர்களை மோசடி செய்யும் நடவடிக்கைகளுக்கு குறித்த தேரரும் துணை போயுள்ளதாக விசாரணைகளில் வெளிப்பட்ட தகவல்களுக்கு அமைய, சி.ஐ.டி.யின் சிறப்புக் குழு அவரைக் கைது செய்ததாக விசாரணைகளை கையாளும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
சில வர்த்தகர்களிடம் திலினி, பணம் பெறும் போது தங்கக் கோல் எனக் கூறி தங்க முலாம் பூசப்பட்ட பித்தளை கோல்கலை பிணையாக வழங்கியுள்ள நிலையில், அந்த தங்க முலாம் பூசப்பட்ட பித்தளை கோல்கள் தங்க கோல்களாக சித்திரிக்கப்பட்டு, பொரளை சிறிசுமன தேரரின் விகாரையிலேயே வைக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டிருந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிப்பட்டுள்ளன. அவ்வாறான பின்னணியிலேயே குறித்த தேரர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன.
இதனிடையே, திலினி பிரியமாலியின் திட்டப்படி செல்வந்தர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பிரபல நடிகைகள் சிலர் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க சி.ஐ.டி.யினர் தீர்மானித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அதன்படி மோசடி செய்த பின்னர் வர்த்தகர்களை அச்சுறுத்த நடிகைகளைக் கொண்டு, பாலியல் ஆசைகளை தூண்டும் வண்ணமாக நடந்துகொண்டு அவற்றை பதிவு செய்துள்ளமை தொடர்பில் விஷேட விசாரணைகள் இடம்பெறுகின்றன.
அதன்படி நேற்று முன் தினம் ( ஒக்டோபர் 31) பிரபல சின்னத் திரை நடிகை சேமினி இத்தமல்கொடவிடம் சி.ஐ.டி.யினர் விசாரணை நடாத்தியுள்ளனர். அவரிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடாத்தப்பட்டுள்ளது.
திலினியுடனான அவரது தொடர்பு குறித்து இதன்போது விசாரிக்கப்பட்டுள்ளது. எனினும் திலினியின் மோசடி நடவடிக்கையிலோ அல்லது வர்த்தகர்களை ஆச்சுறுத்தும் நடவடிக்கையுடனோ தனக்கு தொடர்பில்லை என நடிகை சி.ஐ.டி.யினரிடம் தெரிவித்துள்ளதாக அறிய முடிகின்றது.
எவ்வாறாயினும் அவரது வாக்கு மூலத்தின் உண்மை தன்மையை உறுதிச் செய்ய விசாரணைகள் தொடரும் நிலையில், தேவை ஏற்படின் மீண்டும் விசாரணைக்கு அழைக்கபப்டுவார் எனற நிபந்தனையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதனைவிட, இந்த விவகாரத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள மேலும் இரு நடிகைகள் சி.ஐ.டி.யில் ஆஜராவதை தொடர்ந்து தவிர்த்து வருவதாக அறிய முடிகின்றது.
இது இவ்வாறிருக்க, ச இந்த விவகாரத்தில் திலினிக்கு பாதுகாப்பளித்ததாக கூறப்படும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கும், திலினியிடம் முதலீடு செய்ய வர்த்தகர்களை தூண்டியதாக நீதிமன்றில் பெயர் குறிப்பிடப்பட்ட, தற்போது வெளிநாட்டு பயணம் தடைச் செய்யப்பட்டுள்ள ஜானகீ சிறிவர்தன எனும் பெண்ணுக்கும் இடையில் நடந்ததாக கூறப்படும் உரையாடல் அடங்கிய முக்கிய குரல் பதிவொன்று விசாரணையளர்கலுக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது. அதில் மிக முக்கிய, இரகசிய தகவல்கல் அடங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் அது குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.
இவ்வாறான நிலையில் இந்த மோசடி விவகாரத்தில் இதுவரை கைது செய்யப்ப்ட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி மற்றும் அவரது கணவர் என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இசுரு பண்டார ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று ( 20 கோட்டை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM