கொழும்பு – 07 மகளிர் கல்லூரியின் தமிழ் மாணவர் சங்கம் தனது 90ஆவது அகவை நிறைவை முன்னிட்டு ‘தேன் தமிழ் ஆரம்’ நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வானது, கடந்த 22ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. ‘நவம்’ எனும் பதத்தை கருவாகக் கொண்டு இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலை மாணவிகளால் நடனம் மற்றும் இசை நிகழ்சிகள் பல மேடையேற்றப்பட்டன.
தமிழ் மாணவர் சங்கம் ஒரு பார்வை…
தமிழ் மாணவர் சங்கம் 1932ஆம் ஆண்டு க்வென்ஒபினால் சுடரேற்றி ஆரம்பிக்கப்பட்டது.
முத்தமிழுக்கு பணி செய்து வரும் இம்மன்றம் ஆசிரியர் திருமதி முத்தையா அவர்களின் வழிகாட்டலில் 1950ஆம் ஆண்டு ‘மனமே மனம்’ என்ற கலை நிகழ்ச்சியை மேடையேற்றி சிறந்த முறையில் ஆற்றலை வெளிப்படுத்தியது.
இதன் தொடர்ச்சியாக பல நிகழ்வுகளையும் நடத்திவந்த தமிழ் மாணவர் சங்கம் இவ்வாண்டு தனது 90ஆவது ஆண்டை சிறப்பிக்கும் முகமாக நமது பாரம்பரியத்தில் மகத்தான சிறப்பம்சமாக விளங்கும் எண் 9ஐ குறிக்கும் ‘நவம்’ என்ற கருப்பொருளை விளக்கும் விதமாக ‘தேன் தமிழ் ஆரம்’ நிகழ்வு அமையப்பட்டிருந்தமை சிறப்பாகும்.
(படங்கள்: ஜெ. சுஜீவ குமார்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM