(செய்திப்பிரிவு)
பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறுகின்ற தினங்களிலும், வரவு - செலவுத்திட்ட விவாதம் இடம்பெறுகின்ற காலப்பகுதியிலும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அரசாங்க தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடு செல்வதை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை இரண்டாம் மதிப்பீட்டுக்காக எதிர்வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், அச்சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் எதிர்வரும் 15 - 21 ஆம் திகதி வரை நடைபெற்று, 22 ஆம் திகதி வாக்கெடுப்பு நடாத்தப்படும்.
அதேபோன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை மீதான விவாதம் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதிவரை நடைபெறவிருப்பதுடன் அதன்மீதான வாக்கெடுப்பை டிசம்பர் 8 ஆம் திகதி நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறுகின்ற தினங்களிலும், வரவு செலவுத்திட்ட விவாதம் இடம்பெறுகின்ற காலப்பகுதியில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அரசாங்க தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடு செல்வதை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அரசாங்க கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவசர மருத்துவ தேவைக்களுக்காக அல்லது அரசின் அவசர பணிகளுக்கான சந்தர்ப்பங்கள் தவிர, பாராளுமன்றம் கூடுகின்ற தினங்களிலும் வரவு - செலவுத்திட்ட விவாதம் இடம்பெறுகின்ற காலப்பகுதியிலும் வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடாது என பிரதமரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM