அடக்குமுறைக்கு எதிரான தொழிற்சங்கங்களின் கூட்டுப் பிரகடனத்தில் எதிர்க்கட்சி தலைவர் கைசாத்து

Published By: Digital Desk 3

01 Nov, 2022 | 04:48 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் , பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறும் வலியுறுத்தி இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தை தடுப்பதற்கு முயற்சிக்க வேண்டாம். எவ்வகையான தடைகள் விதிக்கப்பட்டாலும் ஆர்ப்பாட்டத்தை நிறுத்தப் போவதில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மக்களுக்காக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் எவ்வித பயங்கரவாத செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை. மாறாக மே 9 ஆம் திகதி கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம போராட்டங்களின் மீது தாக்குதல்களை மேற்கொண்டவர்களே பயங்கரவாதிகள் என்றும், அவர்களே புனர்வாழ்வளிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை  அடக்குமுறைக்கு எதிரான தொழிற்சங்கங்களின் கூட்டுப் பிரகடனத்தில் கையொப்பமிடும் நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

தொழிற்சங்கங்கள் , சிவில் அமைப்புக்கள் , சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் இணைந்து ஏற்பாடு செய்துள்ள போராட்டத்தில் நாமும் பங்கேற்போம். எமது உரிமைக்கான இந்த போராட்டத்தை தடுப்பதற்கு தயாராக வேண்டாம் என்று பாதுகாப்பு தரப்பினருக்கு கூறி வைத்துக் கொள்கின்றோம். எந்தவொரு காரணத்திற்காகவும் போராட்டத்தை நிறுத்துவதற்கு நாம் தயாராக இல்லை.

அமைதியான இந்த போராட்டத்தில் எந்தவொரு காரணத்திற்காகவும் வன்முறை, துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல் போன்றவற்றில் ஈடுபட யாரும் முயற்சிக்கப் போவதில்லை. மக்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்காகவே நாம் இந்த போராட்டத்தினை முன்னெடுக்கின்றோம். கடந்த காலங்களில் மக்களுக்காக போராடியவர்கள் தற்போதைய அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

அனைத்து பல்லைக்கழக மாணவர்களை பயங்கரவாதிகள் என்று கூறுகின்றனர். நாட்டை இந்த மோசமான நிலைமைக்கு கொண்டு சென்றவர்களே பயங்கரவாதிகள். அவர்களுக்கே புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும். 

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு , தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் எவ்வாறான பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டனர் என்பதை இன்னும் அவர்களால் கூற முடியாதுள்ளது.

அரச பயங்கரவாதமே இன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. எந்த எதிர்ப்புக்கள் இடையூறுகள் வந்தாலும் போராட்டத்தை இடைவிடாமல் முன்னெடுப்போம். 

எனவே இதனை நிறுத்த வரவேண்டாம் என்று சகலருக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன். ஆர்ப்பாட்டத்தைத் தடுப்பதாகக் கூறி , உடலில் கை வைக்க வர வேண்டாம் என்று பாதுகாப்பு தரப்பினருக்கு தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கற்பிட்டி விமானப்படை முகாமில் வெடிப்பு :...

2023-09-26 21:06:57
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் ராஜபக்ஷ்வினருக்கும் எந்த...

2023-09-26 19:50:49
news-image

அலி சப்ரி - ஜெய்சங்கர் சந்திப்பு...

2023-09-26 17:04:48
news-image

நாட்டில் நடமாடும் கொள்ளைக் கும்பல் :...

2023-09-26 17:25:05
news-image

இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு : விசாரணைகளை...

2023-09-26 19:41:18
news-image

கருத்துச்சுதந்திரத்தின் அவசியத்தை இலங்கையிடம் வலியுறுத்தியது பிரித்தானியா

2023-09-26 19:01:03
news-image

இலங்கையில் சினோபெக் நிறுவனத்தின் விநியோக செயற்பாடுகளை...

2023-09-26 20:04:20
news-image

முல்லைத்தீவில் புலிகளின் ஆயுதங்கள், தங்கம் தேடிய...

2023-09-26 19:00:05
news-image

போரில் உயிரிழந்தவர்களுக்கான பொது நினைவுச்சின்னம் :...

2023-09-26 17:10:33
news-image

பிரான்ஸ் தூதுவர் யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயம்

2023-09-26 20:01:05
news-image

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினரின் திடீர்...

2023-09-26 20:00:41
news-image

தளபாட விற்பனை நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து...

2023-09-26 17:04:11