மாணவர்கள் கடலில் மூழ்கியதால் ; 1500 மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை

Published By: Ponmalar

26 Nov, 2016 | 01:23 PM
image

மட்டக்களப்பு, ஏறாவூர் புன்னைக்குடா கடலில் தினமும் ஆழ்கடல் மற்றும் கரையோர மீன்பிடியில் ஈடுபடும் சுமார் 1500 மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்வில்லை என்று தெரிவிக்கின்றனர்.

இந்தக் கடற்கரையில் நேற்று  மாலை பொழுது போக்கிற்காகச் சென்று நீராடிக் கொண்டிருந்த வேளையில் கடல் அலையில் சிக்கிக் காணாமல் போன இரு மாணவர்கள் இன்னமும் தேடப்பட்டு வரும் நிலையில் மீனவர்கள் தமது தொழிலைக் கைவிட்டுள்ளனர்.

தமது மீனவக் கலாசாரத்தின்படி கடலில் எவராவது மூழ்கிக் காணாமல் போய் அவரது உடலம் கண்டு பிடிக்கப்படும் வரை தாங்கள் கடல் தொழிலுக்குச் செல்வதில்லை என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பேரலைகளால் இழுத்துச் செல்லப்பட்ட மாணவர்களின் சடலங்களை கடற்படைச் சுழியோடிகள், மீனவ சுழியோடிகள் ஆகியோர் இன்னமும் கரையோரக் கடல் மற்றும் கடலின் ஆழமான பகுதிகளில் தேடிக்கொண்டிருக்கின்றனர்.

கடலலை சீற்றமாகவும் கடல் கொந்தளிப்பாகவும் இருப்பதால் தேடும் முயற்சியில் சிரமம் இருப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

ஏறாவூர் அலிகார் தேசிய கல்லூரியில் உயர்தர  முதலாம் ஆண்டு கலைப் பிரிவில் கற்கும் பங்குடாவெளியைச் சேர்ந்த சிவகுமார் சிவதர்ஷன் (வயது 17) மற்றும் ஏறாவூரைச் சேர்ந்த அல்மஹர்தீன் பர்ஹான் (வயது 17), சேகுதாவூத் அக்ரம் (வயது 17) ஆகியோரே கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இவர்களில் சேகுதாவூத் அக்ரம் என்ற மாணவன் கடல் மீனவர்களால் காப்பாற்றப்பட்ட நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உமா ஓயா திட்ட பணிகளின் தாமதத்தினால்...

2024-04-20 12:02:11
news-image

முதன்முறையாக தேர்தலில் வாக்களித்ததால் இலங்கை தமிழ்...

2024-04-20 11:53:28
news-image

வாழைச்சேனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர்...

2024-04-20 12:04:32
news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15