வார்த்தைகளில் கவனம் தேவை !

Published By: Devika

01 Nov, 2022 | 03:43 PM
image

ம் செயல்பாடுகளுக்கும், சிந்­தனைக்­கும், மனமாற்றத்துக்கும் சிறு வார்த்தையே தூண்டுதலாக இருக்கும். எப்போதும், எந்தச் சூழலிலும் நாம் தேர்ந்­தெடுக்கும் வார்த்தைகள் முக்கிய­மானவை. 

‘சிறு துரும்பும் பல் குத்த உதவும்’ என்ற பொன்மொழிக்கு ஏற்ப, நல்லதாக நாம் கூறும் சிறு வார்த்தை, மிகப்பெரிய எதிர்மறை செயல்பாடுகளைத் தடுத்து நிறுத்தும் சக்தி கொண்டது. குறிப்பாக, குழந்தைகளிடம் பயன்படுத்தும் வார்த்­தைப் பிரயோகம், அவர்களின் மன நிலையை எளிதில் மாற்றக்கூடியவை. 

ஏதேனும் ஒரு சிறு முயற்சியில் ஈடுபடும் பலரும், 'நான் நினைக்கும் காரியம் எப்போதும் நிகழாது. அவற்றுக்கான முன்னேற்பாடுகளைச் செய்து வைத்தாலும் நினைத்தபடி நடக்காது” என்று கூறுவதுண்டு.

இவர்கள் எளிதில் எதிர்மறை மனநிலைக்கு வந்து விடு­வார்கள். அப்படியானவர்களைச் சுற்றி எப்போதும் நேர்மறையான வார்த்தைப் பயன்பாடு தொடர்ந்து இருக்க வேண்டும். குழந்தைகள் இருக்கும் வீடுகளிலும், நாம் பயன்படுத்தும் வார்த்தைகளில் கவனம் வேண்டும்.

நமது வார்த்தைகளைக் கேட்டு குழந்தைகள் வளர்­கி­றார்கள். கேட்கும் அனைத்து வார்த்தைகளும், அவர்களின் மனதில் எளிதில் பதிந்துவிடும். பின்னர், அவையே அவர்களின் இளமை காலத்­தை­யும் வழி நடத்தும். ஆகையால், நல்ல­தைப் பேசுவோம், நல்வாழ்வு வாழ்வோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right