எள்ளோதரை

Published By: Devika

01 Nov, 2022 | 03:18 PM
image

தேவையான பொருட்கள்

வடித்த சாதம் - 1 கப்

கறுப்பு எள் -  4 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 4

பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை

கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

வெறும் வாணலியில் எள், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். 

ஆறிய பின் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைக்கவும். 

வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி வடித்த சாதம், அரைத்த பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right