எண்ணெய் சருமமா?

Published By: Devika

01 Nov, 2022 | 03:36 PM
image

வெயில் காலங்கள் வந்தாலே நிறைய குறிப்­பாக டீனேஜ் வயது பெண்களுக்கு கவலை தரும் விடயம் எண்ணெய் வடியும் முகம் மற்றும் முகப்பருக்கள். என்னென்னவோ முயற்சி செய்தி­ருப்பீர்கள். இதையும் செய்து பாருங்கள்.  

இந்த சிகிச்சை செய்த மறுநாள் முகத்தில் எண்­ணெய் வழியாது. முகப்பருக்கள் படிப்படி­யாக குறைந்து, சருமம் பொலிவாகும். பொதுவாகவே ஆவி பிடிப்பதனால் சரும துவா­ரங்­கள் திறந்துவிடும். இதனால் சருமத்தில் தங்கி­யிருக்­கும் கொழுப்பு படிமங்கள், இறந்த செல்கள் அழுக்­கு­கள் வெளியேறிவிடும். இதனால் பருக்­கள் வராமல், முகத்தின் துவாரங்கள் இறுகி பளிச்­சென்று வைத்திருக்கும். 

இந்த மூலிகை ஆவி இன்னும் சிறந்த பலனை தரும். எப்படி செய்வதென பார்ப்போம்.

தேவையான பொருட்கள்  
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன் 
க.பட்டை - சில துண்டுகள் 
க்ரீன் டீ - 1 டீஸ்பூன் 
நீர் - ஆவி பிடிக்க தேவையான அளவு 

க்ரீன் டீ சருமத்துக்கு தேவையான நிறைய நன்மைகளை கொண்டுள்ளது. அவை சூரியக் கதிர்களால் பாதிக்கப்பட்ட சருமத்தினை சரி செய்கிறது. மஞ்சள் சருமத்தில் ஏற்பட்டுள்ள காயங்கள் மற்றும் கிருமிகளின் தொற்றுக்களை அழிக்கிறது. சருமத்தில் உள்வரை செல்வதால் முகப்பருக்கள் வர காரணமான செல்களில் செயல் புரிந்து சரி செய்கிறது. 

க.பட்டை தொய்வுகளை சரி செய்து சுருக்­கங்களை போக்கும். சருமத்தில் உள்ள கரு­மையை குறைக்கிறது. இது சருமத்துக்கு புத்துணர்ச்சியை தருகிறது. 

செய்முறை  

முதலில் நீரை கொதிக்கவிடுங்கள். அதில் க.பட்டையையும் க்ரீன் டீத்தூளையும் சேர்க்க வேண்டும். இரு நிமிடங்களுக்கு பிறகு அடுப்பை அணைத்துவிடுங்கள். பின்னர் மஞ்சள் பொடியை சேர்த்து ஆவி பிடிக்கவும். நன்றாக கன்னம், மூக்கின் மேல் பகுதிகளில் ஆவி உள்ளே புகும்படி செய்யுங்கள். சூடு ஆறும் வரை ஆவி பிடியுங்கள். 

வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்தால், முகப்பரு எண்ணெய் வடிதல், மாசு மரு, கருமை ஆகிய பிரச்சினைகள் போய்விடும். இது முகத்­துக்கு பொலிவு தந்து சுருக்கங்களை போக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right