ஆப்கானிஸ்தானை வென்றது இலங்கை அணி!

Published By: Digital Desk 5

01 Nov, 2022 | 01:36 PM
image

(நெவில் அன்தனி)

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பிறிஸ்பேன் கபா விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்ற ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 1 சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்களால் இலங்கை வெற்றியீட்டியது.

ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 145 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 18.3 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்க ளைப்  பெற்று மிகவும் அவசியமான வெற்றியைப் பெற்றது.

இப் போட்டி மழையினால தடைப்படக்கூடும் என எதிர்வு கூறப்பட்டபோதிலும் இந்தப் போட்டி தடையின்றி நடைபெற்றது. 

Wanindu Hasaranga got rid of Usman Ghani, caught at deep midwicket, Afghanistan vs Sri Lanka, T20 World Cup, Brisbane, November 1, 2022

இந்த போட்டி முடிவை அடுத்து அரை இறுதிக்கு செல்வதற்கான இலங்கையின் வாய்ப்பு சிறிய அளவில் பிரகாசம் அடைந்துள்ளது. 

ஆனால், குழு 1இல் நடைபெறவுள்ள கடைசிக் கட்ட முடிவுகளே இக் குழுவிலிருந்து எந்தெந்த அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும் என்பதை உறுதிசெய்யும். 

இங்கிலாந்தும் அவுஸ்திரேலியாவும் எஞ்சிய போட்டிகளில் தோல்வி அடைந்தால் அரை இறுதி வாய்ப்பு இலங்கைக்கு கிடைக்கும்.

இலங்கை அதன் கடைசிப் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது.

Kusal Mendis drives one over covers, Afghanistan vs Sri Lanka, Men's T20 World Cup, Brisbane, November 1, 2022

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற இன்றைய போட்டியிலும் இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

குசல் மெண்டிஸும் தனஞ்சய டி சில்வாவும் 2ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது குசல் மெண்டிஸ் 25 ஓட்டங்களுடன் வெளியேறினார். (46 - 2 விக்.)

எனினும் தனஞ்சய டி சில்வாவும் சரித் அசலன்கவும் 3 ஆவது விக்கெட்டில் 56 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை அணிக்கு நம்பிக்கை ஊட்டினர்.

Dhananjaya de Silva took charge after the Sri Lanka openers fell, Afghanistan vs Sri Lanka, T20 World Cup, Brisbane, November 1, 2022

மொத்த எண்ணிக்கை 100 ஓட்டங்களாக இருந்தபோது சரித் அசலன்க 19 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

ஒரு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய தனஞ்ச டி சில்வாவுடன் இணைந்த பாணுக்க ராஜபக்ஷ  4ஆவது விக்கெட்டில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கைக்கு அவிசியமான வெற்றியைக் கிடைக்கச் செய்தார்.

தனஞ்சய டி சில்வா 42 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக 66 ஓட்டங்களுடன் ஆட்மிழக்காதிருந்தார்.

வெற்றிக்கு 3 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது பானுக்க ராஜபக்ஷ 18 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார்.

Mujeeb Ur Rahman is up and running after castling Pathum Nissanka with a peach, Afghanistan vs Sri Lanka, Men's T20 World Cup, Brisbane, November 1, 2022

ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் முஜிப் உர் ரஹ்மான் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ராஷித் கான் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும்   கைப்பற்றினர்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களைப்  பெற்றது.

Rahmanullah Gurbaz whacks one over midwicket, Afghanistan vs Sri Lanka, Men's T20 World Cup 2022, Brisbane, November 1, 2022

ரஹ்மானுல்லா குர்பாஸ் (28), உஸ்மான் கானி (27) ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி பவர் ப்ளே ஓவர்களில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆனால், 7ஆவது ஓவரில் குர்பாஸின் விக்கெட்டை லஹிரு குமார கைப்பற்றிய பின்னர் ஆப்கானிஸ்தான் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது.

முதல் ஆறு துடுப்பாட்ட வீரர்கள் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றபோதிலும் அவர்கள் கணிசமான ஓட்டங்களைப் பெறத் தவறியமை ஆப்கானிஸ்தானுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது.

Najibullah Zadran had a lot to do after back-to-back wickets, Afghanistan vs Sri Lanka, T20 World Cup, Brisbane, November 1, 2022

ஆரம்ப வீரர்களைவிட இப்ராஹிம் ஸத்ரான் (22), நஜிபுல்லா ஸத்ரான் (18), மோஹமத் நபி (13) ஆகியோர் 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

இலங்கை பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க டி சில்வா 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் லஹிரு குமார 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தனஞ்சய டி சில்வா 9 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டையும் கசுன் ராஜித்த 31 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

Wanindu Hasarnga didn't concede a boundary in his four overs, and picked up three wickets, Afghanistan vs Sri Lanka, T20 World Cup, Brisbane, November 1, 2022

ஆட்டநாயகன்: வனிந்து ஹசரங்க டி சில்வா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58