தமிழின் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் 'கோஸ்டி' படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இப்படத்தின் டீசர் வெளியான 24 மணி நேரத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.
'குலேபகாவலி', 'ஜாக்பாட்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'கோஸ்டி'.
இதில் காஜல் அகர்வால் கதையின் நாயகியாக இரட்டை வேடத்தில் நடித்திருக்க, இவருடன் இயக்குநரும், நடிகருமான கே எஸ் ரவிக்குமார், ராதிகா, ரெடின் கிங்ஸ்லி, தங்கதுரை, ஜெகன், ஊர்வசி, ஆடுகளம் நரேன், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி, தேவதர்ஷினி ஆகியோருடன் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
ஜேக்கப் ரத்னராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லர் வித் கொமடி ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சீட் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
டீசரில் நடிகை காஜல் அகர்வால் பொலிஸ் அதிகாரியாகவும், நடிகையாகவும் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். இதில் ஒரு கதாபாத்திரத்திற்கு பேய் பிடிக்கிறது. டீசரில் யோகி பாபுவின் வசனங்கள் கலகலப்பாகவும், கவரும் வகையிலும் அமைந்திருப்பதால் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM