ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரச தலைவர்கள் பேரவை கூட்டத்தில் இந்தியாவின் சார்பில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.
இன்று(01) இடம்பெற்ற இந்த கூட்டம் மெய்நிகர் ஊடாக இடம்பெற்றது.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த கூட்டத்தில் வர்த்தகம் மற்றும் பொருளாதார நிகழ்ச்சி நிரலில் கவனம் செலுத்துவதுடன் அதன் வருடாந்திர வரவு - செலவுத் திட்டமும் அங்கீகரிக்கப்படும்.
இந்தக் கூட்டத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள், கண்காணிப்பு நாடுகள், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச் செயலாளர் மற்றும் பிராந்திய பயங்கரவாத எதிர்ப்புக் கட்டமைப்பின் நிர்வாக இயக்குநர் ஆகியோர் கலந்து கொண்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய பிராந்தியத்தில் பல்வேறு செயல்பாடுகள் - உரையாடல் வழிமுறைகள் மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷ்யா, சீனா, கிர்கிஸ் குடியரசு, கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் ஜனாதிபதிகளால் 2001 இல் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் அரச தலைவர்கள் பேரவை நிறுவப்பட்டது.
இந்தியாவும் பாகிஸ்தானும் 2017 இல் அதன் நிரந்தர உறுப்பினர்களாக மாறியமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM