கருத்தடை மாத்திரைகள் பக்க விளைவை ஏற்படுத்துமா ? - நிபுணர்கள் கூறுவது என்ன?

01 Nov, 2022 | 11:59 AM
image

கருத்தடை மாத்திரைகள் பக்க விளைவை ஏற்படுத்துமா என்பது குறித்து நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகம் முழுவதும் கருத்தடை மாத்திரைகள், கருத்தடை சாதனங்களின் விற்பனை மும்மடங்கு அதிகரித்திருப்பதாக மருத்துவ உபகரணங்களுக்கான வர்த்தக நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். 

கொரோனா காலகட்டம் என்பதை கடந்து தற்போது கணவன் - மனைவி என இருவரும் வீட்டிலிருந்து பணிபுரிவதால் இது சாத்தியமாகி இருக்கக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

கருத்தடை மாத்திரைகள் அதிலும் ஒருங்கிணைந்த கருத்தடை மாத்திரைகள் நல்ல பலனை பெண்மணிகளுக்கு அளித்து வந்தாலும், இதனை தொடர்ச்சியாகப் பயன்படுத்தினால் பக்க விளைவுகள் ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்கள். 

குறிப்பாக உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்திருக்கும் பி. எம். ஐ. என்ற இலக்கை விட கூடுதலாக உடல் எடை கொண்டவர்களும், உடற்பருமன் கொண்டவர்களும், இத்தகைய ஒருங்கிணைந்த கருத்தடை மாத்திரைகளை தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது, அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இரத்த உறைவு பாதிப்பு ஏற்படுவதாக அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. 

இதன் காரணமாக உடல் பருமன் உள்ள பெண்கள், கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தும் முன் மருத்துவர்களின் ஆலோசனையை அவசியம் பெற வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள்.

டொக்டர் விஜயஸ்ரீ

தொகுப்பு அனுஷா.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூமோகாக்கல் தடுப்பூசியை யார் செலுத்திக் கொள்ள...

2025-03-15 16:44:59
news-image

நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2025-03-14 18:48:08
news-image

நிணநீர் நுண்ணறை வீக்க பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-03-13 19:58:33
news-image

அன்கிலொக்லொஸியா எனும் நாக்கில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2025-03-12 15:11:15
news-image

டெம்போரோமாண்டிபுலர் ஜாயிண்ட் டிஸ்பங்சன் என காதில்...

2025-03-11 17:36:18
news-image

கண் புரை சத்திர சிகிச்சைக்கு பின்னரான...

2025-03-10 16:47:15
news-image

ஒலிகோஹைட்ராம்னியோஸ் எனும் பனிக்குட நீர் குறைப்பாடு...

2025-03-06 15:49:10
news-image

குளுக்கோமா நோய் : 2020 ஆம்...

2025-03-06 04:09:10
news-image

சமச்சீரற்ற இதய துடிப்பு பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும்...

2025-03-03 14:44:16
news-image

இதய பாதிப்பினை கண்டறிவதற்காக சி டி...

2025-03-01 16:56:34
news-image

புராஸ்டேட் வீக்க பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2025-02-26 17:21:25
news-image

புலன் இயக்க பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிக்கும்...

2025-02-25 18:33:10