உள்ளூராட்சி நிறுவனங்களின் சட்டங்களுக்கமைய அதிகாரங்களை அதிகரிப்பதற்கு உடனடி நடவடிக்கை - பிரதமர்

Published By: Digital Desk 3

01 Nov, 2022 | 09:40 AM
image

(எம்.மனோசித்ரா)

உள்ளூராட்சி நிறுவனங்களின் சட்டங்களுக்கமைய அவற்றின் அதிகாரங்களை அதிகரிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன  தெரிவித்தார்.

வாதுவை புதிய சந்தைத் தொகுதியை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

அரசாங்கம் எப்போதும் வர்த்தக சமூகத்தினருக்கு சக்தியை அளிக்கும் விதத்தில் செயற்படுவதற்கான தீர்மானங்களை எடுப்பதுடன், பொதுமக்களது பிரச்சினைகளைத் தீர்க்கும் முதலாவது நிறுவனமாக, உள்ளூராட்சி நிறுவனங்கள் செயற்படுகிறது. பொதுமக்களுக்கு சிறந்த வினைத்திறனான சேவைகளை வழங்கும் பொருட்டு களுத்துறை பிதேச சபையை, நகர சபையாக மாற்றுவதற்கு அரசாங்கம்  நடவடிக்கை எடுத்தது.

அரசாங்கம் என்ற ரீதியில் நிதிப்பிரச்சனைகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியிருந்தாலும், கொவிட் தொற்று உலகளாவிய ரீதியில் பரவியமையானது,  இந்நெருக்கடி மேலும் தீவிரமடைவதற்குக் காரணமாகியது. 

அதனால் பொதுமக்களது சுகாதாரத்திற்காக  அதிகளவான பணத்தை அரசாங்கம் செலவு செய்யவேண்டியேற்பட்டது. தற்போதைய நிலைமைகளை சமாளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜே.வி.பிக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி தேர்தல் விஞ்ஞாபனம்...

2024-11-03 08:53:11
news-image

அடுத்த 10 வருடங்களில் குடும்பமொன்று கார்...

2024-11-03 08:29:55
news-image

தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞானபத்தில் திருத்தம்

2024-11-03 08:24:23
news-image

கன்னி வரவு - செலவு திட்டத்தை...

2024-11-03 08:14:16
news-image

இன்றைய வானிலை 

2024-11-03 06:22:50
news-image

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விசேட விநியோகம்...

2024-11-02 18:29:51
news-image

யாழில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி கோடிக்கணக்கான...

2024-11-02 18:39:36
news-image

இல்லாத ஒன்றுக்கு கனவு காண்பதை விட...

2024-11-02 18:36:33
news-image

இவ்வருடத்தில் வீதி விபத்துக்களால் 1,898 பேர்...

2024-11-02 18:31:13
news-image

பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கும் ஜேர்மன் தூதுவர்...

2024-11-02 18:35:49
news-image

கேகாலையில் கேரள கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்...

2024-11-02 18:07:18
news-image

புத்தளத்தில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

2024-11-02 17:21:11