bestweb

சரத்சந்திர கைது செய்யப்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது 

Published By: Ponmalar

25 Nov, 2016 | 09:59 PM
image

ஓய்வு பெற்றதன் பின்னர் பொலிஸ் விஷேட அதிரடிப்படைக்கு சொந்தமான வாகனத்தை பயன்படுத்தியமையினால் சுமார் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபா வீணடிப்பு செய்த சம்பவம் தொடர்பில்  பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் முன்னாள் கட்டளையதிகாரியான பிரதி பொலிஸ்மா அதிபர் கே.எல்.எம். சரத்சந்திர கைது செய்யப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் முன்னாள் கட்டளையதிகாரி மிக திறமையான அதிகாரி என்பதுடன் தேசிய பாதுகாப்பு மற்றும் முக்கிய பிரமுகர் பாதுகாப்பு பிரிவில் செயற்பட்டு நாட்டிற்கு சேவையாற்றியுள்ளதாகவும் ஜாதிக ஹெல உறுமய வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

நாட்டில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் கிழக்கின் பாதுகாப்பு தொடர்பில் செயற்பட்டது மாத்திரம் அன்றி தேசிய பாதுகாப்பு மற்றும் முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு தொடர்பில் திறமையாக செயற்பட்டு பாரிய சேவையினை முன்னெடுத்தவர். நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பிலும் முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு தொடர்பிலும் பாரிய சேவையாற்றியவரை பொலிஸ் தினைக்களத்திற்கு சொந்தமான வாகனத்தை பயன்படுத்தியமை தொடர்பில் சிறையிட்டமை ஆச்சரியமிக்க ஒரு விடயமாகும். 

நாட்டில் போர் வெற்றிக்கு மறைந்துக் கொண்டு தேசப்பற்றாளராக காட்டிக் கொண்டு பல கோடி ரூபா தேசிய நிதியை சூரையாடியுள்ளனர்.  மோசடியான அரசியல்வாதிகள் சுதந்திரமாக ஊடகங்கள் முன் வீராப்பு பேசுகையில், இவ்வாறான சிறிய சம்பவங்களுக்கு குறித்த அதிகாரியை சிறை வைத்தமையை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2025-07-18 06:18:07
news-image

கொலை குற்றவாளிகளை பாதுகாக்கவே ரணில்-ராஜபக்ஷ தரப்பு...

2025-07-18 03:20:51
news-image

தேங்காய் எண்ணெய் சில்லறை விற்பனைத் தடைச்...

2025-07-18 03:09:46
news-image

ஈச்சிலம்பற்று திருவள்ளுவர் வித்தியாலய பௌதீக ஆசிரியர்...

2025-07-18 03:04:07
news-image

இரணைமடு குளத்தில் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்ட...

2025-07-18 02:52:33
news-image

323 கொள்கலன்கள் விடுவிப்பு முறையற்றது ;...

2025-07-17 17:05:55
news-image

பூஸா அதி உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின்...

2025-07-17 16:43:19
news-image

தேசிய, மதம் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக...

2025-07-17 22:21:36
news-image

அமெரிக்க வரிக்கொள்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்...

2025-07-17 17:17:41
news-image

புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து நடைபெறும்...

2025-07-17 21:39:52
news-image

துறைமுக நகர திட்டத்தை இரத்து செய்வதற்கு...

2025-07-17 17:36:49
news-image

செம்மணி படுகொலை : வடக்கு மற்றும்...

2025-07-17 19:57:56