சூரன்பேரில் வாள் வெட்டுக்கு இலக்காகி இருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை கிழக்கு சித்தங்கேணியை சேர்ந்த நவரத்தினராசா ஜனந்தன் (வயது 33) மற்றும் வட்டுக்கோட்டை மேற்கை சேர்ந்த கிருஷ்ணகுமார் கஜானந்தன் (வயது 38) ஆகிய இருவருமே காயமடைந்துள்ளனர்.
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சங்கரத்தை பங்குருமுருகன் ஆலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சூரன் போர் திருவிழா இடம்பெற்றது.
அதன் போது, ஆலயத்தில் இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. தர்க்கம் கைகலப்பாகமாறி வாள் வெட்டில் முடிவடைந்தது.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM