சோமாலிய தலைநகரில் குண்டுவெடிப்பு - 100 மேற்பட்டோர் பலி

31 Oct, 2022 | 11:29 AM
image

சோமாலிய தலைநகர் மொகாடிஸுவில் இடம்பெற்ற இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி  ஹஸ்ஸன் ஷேக் மொஹம்மட் தெரிவித்துள்ளார்.

சோமாலிய தலைநகர் மொகாடிஸ்ஹூவில் உள்ள அந்நாட்டின் கல்வி அமைச்சகத்தின் முன்பாக நேற்று முன்தினம் இந்த கார் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்துள்ளது. 

முதலில், ஒரு கார் வெடித்து சிதறி உள்ளது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் அருகில் இருந்தவர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது மற்றொரு கார் வெடிகுண்டு வெடித்துள்ளது.

வெடி விபத்தை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு செய்த சோமாலியா ஜனாதிபதி ஹஸ்ஸன் ஷேக் மொகம்மது, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது, குழந்தைகள், பெண்கள், மாணவர்கள், தொழில்புரிபவர்கள் என பலரும் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக வேதனை தெரிவித்தார்.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்ற போதிலும், அல் ஷபாப் என்ற இஸ்லாமிய அமைப்பு இந்த தாக்குதலின் பின்னணியில் இருக்கக்கூடும் என ஜனாதிபதி ஹஸ்ஸன் ஷேக் மொகம்மது குற்றம் சாட்டியுள்ளார். 

மிகப் பெரிய உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தக் கூடிய தாக்குதல்களை நிகழ்த்தும் இந்த அமைப்பு, பொதுவாக அவற்றுக்கு பொறுப்பேற்பதில்லை என கூறப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, துருக்கி, கத்தார் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

கடந்த 2017ல் குண்டுவெடிப்பு நிகழ்ந்த அதே இடத்தில் தற்போது மீண்டும் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. கடந்தமுறை நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

பலர் காயமடைந்தனர். அப்போது டிரக் வாகனத்தின் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. தற்போது 2 கார்களைக் கொண்டு குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழக முதல்வர் தொடங்கி வைத்த 'தமிழ்ப்...

2024-06-15 15:57:04
news-image

அருந்ததி ராய் மீது சட்டவிரோத நடவடிக்கைகள்...

2024-06-15 12:30:58
news-image

ரஷ்யா - உக்ரைன் மீதான யுத்தத்தை...

2024-06-15 13:22:16
news-image

செங்கடல் பகுதியில் மீண்டும் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின்...

2024-06-15 12:09:13
news-image

இடம்­பெ­யர்ந்த நிலையில் 120 மில்­லியன் மக்கள்...

2024-06-15 11:56:35
news-image

தாய்லாந்தில் ஆசிய யானை ஈன்ற அரிய...

2024-06-14 17:19:08
news-image

இறைவனின் புனித இல்லத்தினைத் தரிசிக்கும் யாத்ரீகர்களுக்கு...

2024-06-14 02:41:17
news-image

குவைத் தீ விபத்தில் தமிழர் உயிரிழப்பு

2024-06-13 12:28:24
news-image

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் பலர்...

2024-06-12 18:00:38
news-image

தமிழக பாஜகவில் மோதல்; மேடையிலேயே கண்டித்த...

2024-06-12 15:09:56
news-image

குவைத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில்...

2024-06-12 14:53:54
news-image

ஒடிசா மாநில முதல்வராக மோகன் சரண்...

2024-06-12 20:19:49