பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் விக்னேஸ்வரன் மற்றும் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா ஆகியோரின் முயற்சிகள் சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை துரிதப்படுத்துகிறது நீதி அமைச்சர் விஜயதாச ராயபக்ஷ தெரிவித்துள்ளார்.
30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகளை சந்தித்து கலந்துரையாடிய நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
சிறையில் நீண்ட கலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நீதியரசர் பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் சந்தித்துக் கலந்துரையாடி இருந்தார்.
வட மாகாண ஆளுநரும் ஜனாதிபதியிடனும் என்னிடமும் தமிழ் அரசிகள் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்துவதற்கான பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துமாறு கோரி இருந்தார்.
இவர்கள் இருவரினதும் முயற்சியும் நாட்டின் ஜனாதிபதியினுடைய ஆலோசனையும் குறுகிய காலத்தில் பல அரசியல் கைதிகளை விடுதலை செய்ய உதவியது.
நாட்டினுடைய நீதி அமைச்சர் என்ற வகையில் தமிழ் அரசிகள் கைதிகளின் விடுதலையை விரைவாக மேற்கொள்வதற்கான சட்ட நடைமுறைகளை பின்பற்றி வருகிறோம் எனத் தெரிவித்தார்.
குறித்த சந்திப்பில் கலந்து கொண்ட குரல் அற்றவர்களின் குரல் அமைப்பில் இணைப்பாளர் முருகையா கோமகன் நீதி அமைச்சரிடம் கோருகையில் தமிழ அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.
அந்த மகிழ்ச்சி தொடர்ந்து நீடிப்பதற்கு சிறையில் உள்ள ஏனைய தமிழ் அரசியல் கைதிகளையும் விரைவாக விடுதலை செய்ய உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
குறித்த சந்திப்பில் மட மாகாண ஆளுநரின் செயலாளர் வாகீசனும் கலந்து கொண்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM