மலையகத் தமிழர்களின் எழுச்சி, வளர்ச்சியில் இரட்டை குழல் துப்பாக்கியாகச் செயற்படுவோம் - மனோ 

Published By: Vishnu

30 Oct, 2022 | 08:47 PM
image

(க.கிஷாந்தன்)

" மலையகத் தமிழர்களின் எழுச்சி, வளர்ச்சியில் இரட்டை குழல் துப்பாக்கியாகச் செயற்படுவோம்  என இ.தொ.காவுக்கு அழைப்பு விடுத்திருந்தேன். அது தற்போது சாத்தியப்பட்டுள்ளது.

மலையகம் இன்று ஒளிர்கிறது, ஒரு சிங்கமாக, புலியாக எழுச்சி பெறுகின்றது. நாங்கள் உழைக்க மட்டும் இங்கு வரவில்லை, ஆளவும்தான் வந்துள்ளோம். " என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற எம்.பியுமான மனோ கணேசன் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மேலும் கூறியவை வருமாறு,

" மலையக மக்கள் உழைப்பாளர்களாக இலங்கைக்கு அடியெடுத்து வைத்து 2023 ஆம் ஆண்டுடன் இருநூறு வருடங்களாகின்றன.

நாங்கள் இங்கு உழைப்பதற்கு மட்டும் வரவில்லை. ஆளவும்தான் வந்துள்ளோம். கண்டி இராஜ்ஜியத்தை கடைசியாக ஆண்ட மன்னன்கூட இந்தியா வம்சாவளி தமிழர்தான். எனவே, நாங்களும் ஆண்டபரம்பரைதான். இலங்கையில் இன்று ஒரு தேசிய இனமாக எழுச்சி பெற்றுள்ளோம்.

மலையகத்தில் இருந்து வெளியே சென்று தொழில் செய்பவர்கள், தோட்டத் தொழிலாளர்களை தூக்கி விடுவதற்கு பங்களிப்பு செய்ய வேண்டும்.

அதற்கான கடப்பாடு அனைவருக்கும் உள்ளது. இலங்கை அரசாங்கமும் தேசிய மட்டத்திலான வேலைத்திட்டத்தை சமூக வளர்ச்சிக்காக வகுக்க வேண்டும்.

அதேவேளை, தேயிலை ஏற்றுமதிமூலம் சிறந்த வருமானம் கிடைக்கின்றது. எனினும், அவற்றை பகிர்ந்துக்கொள்வதற்கு தோட்ட நிறுவனங்கள் தயாரில்லை.

எனவே, தொழிலாளர்களுடன் வருமானங்களை பகிர்ந்துகொள்ள தோட்ட நிறுவனங்கள் தாமாக முன்வர வேண்டும். இல்லையேல் தோட்ட நிறுவனங்களுக்கு மறக்க முடியாத பாடத்தை கற்பிப்போம். எங்கள் பொறுமையையும், நிதானத்தையும் எவரும் பலவீனமாக கருதிவிடக்கூடாது. " - என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதுக்குடியிருப்பில் குளத்தினை ஆக்கிரமிக்கும் தனி நபர்...

2023-05-29 22:01:09
news-image

முஸ்லிம்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஜனாதிபதி...

2023-05-29 21:57:12
news-image

பேராசிரியர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் வடக்கு, கிழக்கு...

2023-05-29 17:42:27
news-image

புத்தசாசனத்துக்கு பாதிப்பெனக் குறிப்பிட்டு உண்மை பிரச்சினைகளை...

2023-05-29 15:42:48
news-image

புத்தசாசனத்தை அவமதித்து சமூக வலைத்தளங்களில் பிரபல்யமடையும்...

2023-05-29 14:35:56
news-image

அருவக்காலு குப்பைகளை இறக்குதல், ஏற்றுதல், குப்பைகளை...

2023-05-29 17:37:32
news-image

இந்திய அரசாங்கம் நட்டஈடு கோரியதாக எந்த...

2023-05-29 12:59:56
news-image

பாணந்துறையில் இரண்டு மாடி வீட்டிலிருந்து சடலம்...

2023-05-29 17:28:53
news-image

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கையாளுதல் குறித்து அரச...

2023-05-29 17:35:29
news-image

கிளிநொச்சி, நுவரெலியா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பில் உணவுபாதுகாப்பின்மை...

2023-05-29 17:43:41
news-image

ஒரு கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் கொள்ளை...

2023-05-29 16:40:54
news-image

யாழ்.நகரில் விடுதியில் தங்கி இருந்த இரு...

2023-05-29 16:28:23