பசில் ராஜபக்ஷ வெளி நாட்டில் சிகிச்சைப் பெறுமளவுக்கு உடல் நிலை பலவீனமடைந்துள்ளாரா என்பது குறித்து உடனடியாக ஆராய்ந்து சட்ட வைத்திய அதிகாரி ஊடாக அறிக்கை சமர்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதேவேளை பசில் ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குவதா இல்லையா என்பது குறித்து எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி தீர்ப்பளிப்பதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இருதய நோய் நிலைமை தொடர்பில் தான் அமெரிக்காவில் 3 மாதங்கள் சிகிச்சைப் பெற்றுக்கொன்டிருந்த நிலையில் இடை நடுவே நாடு திரும்பியதாகவும் , அந்த சிகிச்சைகளைத் தொடர மேலும் மூன்று மாதம் வெளி நாடு செல்ல  தனக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் பசில் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.