தோட்டத் தொழிலாளர்களை அப்படியே வைத்திருக்கவே முயற்சி : அதற்கு நாம் இடமளியோம் - மலையக மக்களின் எதிர்காலத்தை நான் பொறுப்பேற்பேன் என்கிறார் சஜித்

Published By: Digital Desk 5

30 Oct, 2022 | 09:15 PM
image

(க.கிஷாந்தன்)

" மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவதற்கு ஆயிரம் நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. இது அடிமைத்தனத்தின் வெளிப்படாகும். இதற்கு முற்றுபுள்ளி வைத்து, பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவோம். மலையக மக்களின் எதிர்காலத்தை நான் பொறுப்பேற்பேன்."

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலுயே சஜித் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

" மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளராக்குவேன் என நான் கூறியபோது, அதற்கு எதிராக இனவாத பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. அவ்வாறானவர்களுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டினர். இந்நாட்டில் இனவாதம், மதவாதத்துக்கு இடமளிக்ககூடாது. நாம் அனைவரும் இலங்கையர்களாக பயணிக்க வேண்டும்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்குவதற்கு ஆயிரம் நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. இத்தனை கிலோ கொழுந்து பறிக்க வேண்டும், அதிகளவு நேரம் வேலை செய்ய வேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இது அடிமைத்தனமாகும். இந்த அடிமைத்தனத்துக்கு முடிவு கட்ட வேண்டும். அதற்காக ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் தோட்டத் தொழிலாளர்கள் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்படுவார்கள்.

சிலர் தோட்டத் தொழிலாளர்களை அப்படியே வைத்திருக்கவே முற்படுகின்றனர். அதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். மலையகத்தில் கல்வி, சுகாதாரம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். வீடுகளும் நிர்மாணிக்கப்படும். எமது ஆட்சிக்கு பிறகு அடுத்த அரசுக்கு அதற்கான பணிகளை மிச்சம் வைக்கமாட்டோம். மலையக மக்களின் எதிர்காலத்தை நான் பொறுப்பேற்பேன்." - என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-03-26 06:29:57
news-image

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின்...

2025-03-26 04:11:39
news-image

பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின...

2025-03-26 04:07:54
news-image

யாழில் அனைத்து சபையிலும் வென்று இருப்போம்...

2025-03-26 04:00:55
news-image

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன்...

2025-03-26 03:52:49
news-image

அருணாசலம் லெட்சுமணன் உள்ளிட்ட குழுவினர் வடக்கு...

2025-03-26 03:47:50
news-image

நபர்களுக்கு எதிரான தடை நாட்டுக்கெதிரான தடையாக...

2025-03-25 21:19:45
news-image

மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை வரவேற்கின்றோம்...

2025-03-25 17:49:05
news-image

தேசபந்து தென்னக்கோன் அரசியலமைப்பை மீறி பொலிஸ்மா...

2025-03-25 21:34:18
news-image

தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்க முழுமையான...

2025-03-25 21:34:44
news-image

எந்த சந்தர்ப்பத்திலும் எமது இராணுவ வீரர்களுக்காக...

2025-03-25 21:30:42
news-image

பிரித்தானியா தடை விதிப்பு : தமிழ்...

2025-03-25 17:00:47