சஜித்தை எதிர்த்து போட்டியிடுபவர்கள் மண்ணைக் கௌவுவது உறுதி - உதயகுமார்

Published By: Digital Desk 5

30 Oct, 2022 | 07:19 PM
image

(க.கிஷாந்தன்)

அடுத்த ஜனாதிபதி தேர்தலின்போது சஜித் பிரேமதாசவுக்கே தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவளிக்கும். சஜித்தை எதிர்த்து போட்டியிடுபவர்கள் மண்ணைக் கௌவுவது உறுதி என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம். உதயகுமார் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

" கொரோனா பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி போன்ற ஆபத்துகளின்போது இந்தியாவே எமக்கு கைகொடுத்தது. ஆபத்துக்கு உதவும் உண்மையான நண்பன் இந்தியா என்பதை மறந்துவிடக்கூடாது.

இலங்கையை பாதாளத்துக்குள் தள்ளிவிட்டு கோட்டாபய ராஜபக்ச நாட்டைவிட்டு ஓடினார். அதன்பின்னர் மக்களின் வாக்குகளால் நாடாளுமன்றம் வரமுடியாத ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானார். ஆக தற்போதைய அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை இல்லை. எனவே, விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலொன்று நடைபெற்றால் சஜித் பிரேமதாசவுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி நிச்சயம் தோள் கொடுக்கும். சஜித் வெற்றி பெறுவார். அவரை எதிர்த்து போட்டியிடுபவர்கள் மண்ணைக் கௌவுவார்கள்.

ஏனெனில் பிரச்சினைகளை மட்டும் பேதாது, தீர்வையும் வழங்கும் சிறந்த தலைவராக சஜித் செயற்படுகின்றார். அவரின் ஆட்சியின்கீழ் மலையக மக்களுக்கும் விடிவு பிறக்கும்." - என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், வெலிக்கடை சிறைச்சாலையின்...

2026-07-10 18:40:05
news-image

வடக்கில் இராணுவக் குறைப்பு மற்றும் பலாலி...

2026-07-10 18:38:06
news-image

தித்வா அனர்த்த நிதி திறைசேரியில் பாதுகாப்பாக...

2026-07-10 16:11:37
news-image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கௌரவத்தையும் உயர்த்துவதே அரசின்...

2026-07-10 20:53:55
news-image

ஒற்றையாட்சி, இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு வார்த்தையின்...

2026-07-10 14:30:42
news-image

சிறைச்சாலை வன்முறைகளைத் தடுத்திருக்க முடியும் ;...

2026-07-10 13:21:14
news-image

பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு இலங்கையின்...

2026-07-10 13:11:19
news-image

குழந்தை பிறப்பை அதிகரிக்க ஊக்கத்தொகை: நாடாளுமன்றத்தில்...

2026-07-10 16:01:53
news-image

துறைமுக நகர ஆணைக்குழுவுக்கு அதிக சம்பளம்;...

2026-07-10 14:45:23
news-image

கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு உடனடி...

2026-07-10 14:31:38
news-image

கிழக்கு புகையிரத பிரச்சினைகளுக்கு நேரடி கள...

2026-07-10 15:31:04
news-image

சேவைக்காலத்தை பூர்த்தி செய்து நாடு திரும்பும்...

2026-07-10 20:04:01