இறந்த உறவினர்களை நினைவுக்கூர்ந்து அஞ்சலி செலுத்துங்கள். ஆனால் விடுதலை புலிகளை மையப்படுத்தி வடக்கில் மாவீரர்தின  நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி கிடையாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. 

இலங்கையில் கடந்த 3 தசாப்த கால போரில் உயிர்நீத்த விடுதலைப் புலிகளை நினைவுகூறும் நாளான மாவீரர் தின நிகழ்வுகள் கார்த்திகை 27ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட உள்ள நிலையில் பாதுகாப்பு அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.