திருடர்களை பாதுகாக்க திருடர்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கம் இது - சஜித்

By Nanthini

30 Oct, 2022 | 04:02 PM
image

(க. கிஷாந்தன்)

திருடர்களை பாதுகாத்துக்கொள்வதற்காக திருடர்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கமே இது. இப்படியான அரசாங்கத்துக்கு எவ்வாறு ஆதரவு வழங்குவது? மக்களை வீழ்த்திவிட்டு, பிணங்கள் மீது நின்று மீண்டெழுவதில் பயன் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நுவரெலியா விஜயத்தின்போது மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுச்சாமி இராதாகிருஷ்ணனின் ஏற்பாட்டின் பேரில் நேற்று சனிக்கிழமை (ஒக் 29) இரவு நுவரெலியா அரலிய விருந்தகத்தில் நுவரெலியா, கந்தபளை, இராகலை ஆகிய நகரங்களின் வர்த்தகர்களுடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. 

இந்நிகழ்வை மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமை தாங்கியதோடு, வர்த்தகர்களும் விவசாயிகளும் தாங்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக சஜித் பிரேமதாசவின் கவனத்குக்கு கொண்டு வந்ததோடு, இது தொடர்பாக பாராளுமன்றத்திலும் வரவு செலவு திட்டத்தின்போதும் குரல் எழுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததோடு, எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் உருவாக்கப்படவுள்ள எதிர்கால அரசாங்கத்தில் இதற்கான நிரந்தர தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதன்போது வருகை தந்தவர்களின் அனைத்து குறைபாடுகளையும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பாக எடுத்துக்கொண்டதுடன், அதற்கான பதிலையும் வழங்கியுள்ளார்.

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய சஜித் பிரேமதாச மேலும் கூறியதாவது,

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியான பின்னர் கோடீஸ்வரர்களுக்கு 600 பில்லியன் ரூபா வரிச்சலுகை வழங்கியதால் அரச வருமானம் 12 வீதத்திலிருந்து 8 வீதமாக சரிந்தது. இதனால் சர்வதேச நிதி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் இலங்கை பின்னிலைப்படுத்தப்பட்டது. 

சர்வதேச மூலதனச் சந்தைக்கு சென்று கடன் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அந்திய செலாவணி கையிருப்பை பயன்படுத்தி கடன் செலுத்தினர். இதனால் டொலர் பற்றாக்குறை ஏற்பட்டது. 

அத்துடன், திட்டமில்லாத பொருளாதார கொள்கைகளால் நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது.

தன்னை சூழ முட்டாள்களை வைத்துக்கொண்டு தன்னிச்சையாக செயற்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ, இருக்கின்ற அதிகாரம் போதாதென 20ஆவது திருத்தச்சட்டத்தையும் நிறைவேற்றி நாட்டை நாசமாக்கினார். இறுதியில் அவர் வீட்டுக்கு செல்லவேண்டிய நிலையேற்பட்டது.

மக்கள் இணைந்து ராஜபக்ஷக்களை விரட்டினாலும், ராஜபக்ஷக்களின் ஆட்சி தான் தற்போது தொடர்கின்றது. 

தம்மை பாதுகாக்கக்கூடிய ஒருவரை மொட்டு கட்சியின் ஜனாதிபதி ஆக்கியுள்ளனர். 

ராஜபக்ஷக்களை காக்க 134 பேர் வாக்களித்துள்ளனர். அதாவது திருடர்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கம் இது. திருடர்களை பாதுகாப்பார்களே தவிர, திருடர்களை பிடிக்கமாட்டார்கள். இது ராஜபக்ஷக்களை காப்பதற்கான அரச பொறிமுறையாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரச செலவுகளை 6 வீதத்தால் குறைப்பதற்கான...

2023-02-02 15:27:21
news-image

விமல், டலஸ், பீரிஸ் அணியினருக்கு எதிராக...

2023-02-02 12:49:22
news-image

தேர்தல் செலவுகளுக்கு கட்டுப்பணம் பயன்படுத்தப்படுகிறதா ?...

2023-02-02 15:25:08
news-image

இலங்கை வருகிறார் நேபாள வெளிவிவகார அமைச்சர்

2023-02-02 15:42:37
news-image

காணாமல்போன வெல்லம்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் நிர்வாணத்துடன்...

2023-02-02 17:03:36
news-image

26 உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் பொலிஸ்...

2023-02-02 16:23:13
news-image

கட்சிக்குள் பிளவை ஏற்படுத்துவோர் மக்களையும் பிளவுபடுத்தி...

2023-02-02 16:59:48
news-image

கம்பளை - நாவலப்பிட்டி பிரதான வீதியில்...

2023-02-02 16:57:03
news-image

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு...

2023-02-02 15:34:04
news-image

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தாலுக்கு அழைப்பு

2023-02-02 16:53:42
news-image

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணயநிதியத்திற்கு உத்தரவாதங்களை...

2023-02-02 15:56:36
news-image

கடவுளிடமே மன்னிப்புக் கோரினேன்; கத்தோலிக்க தேவாலயத்திடம்...

2023-02-02 15:45:01