(எம்.மனோசித்ரா)
மாத்தறை பிரதேசத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான பாடசாலை மாணவனுடன் முச்சக்கரவண்டியில் சென்ற பிரிதொரு மாணவனிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
இது தொடர்பில் மாத்தறையிலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கிளை அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கை தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நேரடி தலையீட்டுடன் கடந்த வெள்ளிக்கிழமை திஹகொட - நாயிம்பல பிரதேசத்தில் பாடசாலை மாணவன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்விடயம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் நேற்று சனிக்கிழமை சம்பவ இடம் பார்வையிடப்பட்டதோடு , முச்சக்கரவண்டியில் சென்ற ஏனைய மாணவனிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இதன் போது அப்பிரதேச மக்களையும் சந்தித்து கலந்துரையாடிய அலுவலக அதிகாரிகள் , அவர்களிடம் அமைதியாக செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு , விசாரணைகளின் முடிவுகள் , பொறுத்தமான பரிந்துரைகளுக்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதான அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM