யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் தமது ஆங்கில மொழியை வளர்ப்பதன் மூலமும் தலைமைத்துவப் பண்பு மற்றும் தொடர்பாடல் பேச்சாற்றலை வளர்ப்பதன் மூலமும் தொழிற்துறையில் சாதிக்கமுடியும் என ரோஸ்மாஸ்ரேஸ் அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
ரோஸ்மாஸ்ரேஸ் அமைப்பினரின் ஊடக சந்திப்பு யாழ். ஊடக அமையத்தில் 29 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றபோதே அவர்கள் இதனை தெரிவித்தனர். அவர்கள் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
முப்பது வருட யுத்தம் காரணமாக யாழ்ப்பாணத்தின் கல்வியில் பாரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றது. கொழும்பில் உள்ளவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதன் காரணமாக உயர் பதவிகளை வகிக்கும் நிலைமை காணப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் தமது ஆங்கில மொழியை வளர்க்க வேண்டும்.
ஆற்றல்மிகு தொடர்பாடல் மற்றும் தலைமைத்துவ வளர்ச்சியை நோக்காகக்கொண்டு சர்வதேச மட்டத்தில் செயற்பட்டுவரும் ரோஸ்மாஸ்ரேஸ் இன்டர்நஷனல் நிறுவனம் இதற்கு பங்காற்றிவருகிறது.
ரோஸ்மாஸ்ரேஸ் இன்டர்நஷனல் அமைப்பானது உலகளாவிய ரீதியில் தனக்கென சுமார் 15 ஆயிரத்து 800 கழகங்களை 149 நாடுகளில் கொண்டுள்ளது. ரோஸ்மாஸ்ரேஸ் இன்டர்நஷனல் அமைப்பானது வடமராட்சி, வவுனியா, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் வடமாகாணத்திற்குரிய கழகங்களைக்கொண்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள இளைஞர்கள் யுவதிகளை வளப்படுத்த ரோஸ்மாஸ்ரேஸ் இன்டர்நஷனல் அமைப்பு தயாராக இருக்கின்றது. எங்களுடன் இணைந்து பயணிப்பதற்கு இளைஞர்கள் யுவதிகள் தயாராக வேண்டும் - என்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM