9 மாதங்களில் 1,400 வாகனக் கொள்ளைச் சம்பவங்கள் பதிவு

Published By: Digital Desk 5

29 Oct, 2022 | 03:58 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வாகன கொள்ளைச் சம்பவங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது. இந்த நிலையில் இவ் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1,406 வாகன கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்பான இடங்களில் வாகனங்களை நிறுத்துமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இலங்கை முழுவதும் வாகன கொள்ளைச் சம்பவங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது. 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் திகதி வரை மொத்தம் 1,406 வாகனங்கள் திருடப்பட்டுள்ளன.  இருப்பினும் கடந்த ஆண்டு (2021) முழுவதும் 1405 வாகனக்  கொள்ளைச் சம்பவங்கள் மட்டுமே பதிவாகியிருந்தன.

திருடப்பட்ட வாகனங்களில் 12 பேருந்துகள், 25 வேன்கள் ,16 லொறிகள், 14 கார்கள், 311 முச்சக்கர வண்டிகள், 1116 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 12 வகையான ஏனைய வாகனங்கள்  உள்ளடங்குகின்றன.

மேலும் திருடப்பட்ட வாகனங்களில்  பல வாகனங்கள் பாதுகாப்பற்ற இடங்களில் நிறுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் வாகனத் திருட்டு சம்பவங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும்,  பாதுகாப்பான இடங்களில் வாகனங்களை நிறுத்துமாறும் பொலிஸார் வாகன சாரதிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லையில் 239 கசிப்பு விற்பனையாளர்கள் இனங்காணப்பட்டனர்;...

2025-03-27 01:47:20
news-image

விபத்தில் சிக்கிய குடும்பப்பெண் யாழ். போதனா...

2025-03-27 01:36:52
news-image

மொரட்டுவையில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது

2025-03-27 00:16:23
news-image

யாழ்.அனலைதீவில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை

2025-03-26 23:54:53
news-image

பொருட்களின் விலைகளையும் சேவை கட்டணத்தையும் குறைக்க...

2025-03-26 19:29:31
news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்...

2025-03-26 19:28:47
news-image

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் செக்...

2025-03-26 19:28:01
news-image

மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்...

2025-03-26 19:46:04
news-image

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் மட்டு. மாமாங்கம்...

2025-03-26 18:05:14
news-image

இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்தலாம் ;...

2025-03-26 17:29:34
news-image

நாடளாவிய ரீதியில் 7 தேர்தல் முறைப்பாடுகள்...

2025-03-26 19:29:58
news-image

வவுணதீவில் மாடு திருடியபோது பொதுமக்களால் தாக்கப்பட்ட...

2025-03-26 17:42:04