(எம்.எம்.சில்வெஸ்டர்)
தற்போதைய 5 லீற்றர் 'பெற்றோல் கோட்டா' வை 10 லீற்றராக அதிகரிப்பதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றினால் பயணிகள் போக்குவரத்தின்போது ,முச்சக்கர வண்டிகளில் முதல் கிலோ மீற்றருக்கு அறவிடப்படும் கட்டணத்தில் 20 ரூபாவை குறைக்கப்பதற்கு தயார் என இலங்கை சுயதொழில் வேலைவாய்ப்பு தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் மஹிந்த குமார தெரிவித்தார்.
முச்சக்கர வண்டி டயர்கள், டியூப்கள், பெற்றி மற்றும் உதிரி பாகங்களின் அதிக விலையேற்றம் காரணமாக முச்சக்கர போக்குவரத்து தொழிலில் ஈடுபடும் 12 இலட்சத்துக்கும் முச்சக்கர வண்டி சாரதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் விலையை குறைத்து நிவாரணம் வழங்குமாறும் அரசாங்கத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
முச்சக்கர வண்டிகளுக்கு வழங்கப்படும் 5 லீற்றர் 'பெற்றோல் கோட்டா' வை 10 லீற்றராக அதிகரித்து தந்தால், பயணிகள் போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் முதல் கிலோ மீற்றருக்கு அறவிடப்படும் கட்டணத்தில் 20 ரூபா குறைக்கப்படும்.
முச்சக்கரவண்டி கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் பயணிகள் முச்சக்கரவண்டிகளில் பயணிக்க மறுத்து நடந்து செல்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM