விஞ்ஞான தொழிநுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நாட்டின் சட்ட விடயதானங்களையும் அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவையுள்ளது.  மேலும் சகல துறைகளிலும் நவீன விஞ்ஞான தொழில்நுட்பத்தை உட்புகுத்தி உயர் சேவையினை உறுதிசெய்யவேண்டும். ஆகவே  உலகிலுள்ள முன்னணி விஞ்ஞான தொழிநுட்பத்தை நாட்டில் அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரவித்தார்.

அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு கிடைத்துள்ள ஐ.எஸ்.ஓ. மற்றும் ஐ.இ.சி தரச்சான்றிதழ்களை ஒப்படைக்கும் நிகழ்வு நேற்று அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்கள கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.