மாங்குளத்தில் சமுர்த்தி ஆரோக்கிய உணவகம் திறப்பு

Published By: Nanthini

28 Oct, 2022 | 05:30 PM
image

முர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சமுர்த்தி ஆரோக்கிய உணவக திட்டத்தின் கீழ் A9 வீதி மாங்குளத்தில் அமையப்பெற்ற சமுர்த்தி ஆரோக்கிய உணவகம் இன்று வெள்ளிக்கிழமை (ஒக் 28) காலை 10.30 மணிக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் ப.ஜெயராணி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இந்த  உணவகத்தினை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தனர்.

மேலும் இந்நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் மு.முபாரக் சிறப்பு விருந்தினராகவும், முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் யாமினி சசீலன் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது அதிதிகள் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டு, கட்டடத்தின் நாடாவினை வெட்டி, சமுர்த்தி ஆரோக்கிய உணவகம் திறந்து வைக்கப்பட்டது.

அத்துடன் அதிதிகளின் உரைகளை தொடர்ந்து, சமுர்த்தி ஆரோக்கிய உணவகம் அதிதிகளால் பார்வையிடப்பட்டது.

நாடளாவிய ரீதியாக 21 சமுர்த்தி ஆரோக்கிய உணவகங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், 20வது மையமாக இந்த உணவகம் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. 

சமுர்த்தி பயனாளிகளின் உள்ளூர் மூலப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டு  பாரம்பரியமான ஆரோக்கியமான உணவினை, வருமானத்தினை அடையும் வகையில் இச்செயற்றிட்டம் அமைந்துள்ளது.

இங்கு குறைந்த விலையில், ஆரோக்கியமான, தரமான உணவினை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

நான்கு மில்லியன் செலவில் அமையப்பெற்ற இச்செயற்றிட்டத்தினை மாங்குளம் சமுதாய அடிப்படையிலான வங்கி சங்கம் கண்காணிக்கும்.

இத்திட்டத்தின் கீழ் 10க்கும் மேற்பட்ட நேரடி பயனாளிகளும், சமுர்த்தி உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் தமது உற்பத்திகளின் சந்தை வாய்ப்பினை பெற்றுக்கொள்வர்.

மேலும் இவர்களுக்கான துறைசார்ந்த பயிற்சிகள் முன்னதாகவே வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மாவட்ட செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள சிரேஷ்ட முகாமையாளர், பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர், பிரதேச சபை உத்தியோகத்தர், மாங்குளம் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள உள்ளக கணக்காய்வு உத்தியோகத்தர்கள், மாங்குளம் சமுர்த்தி வங்கி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக மற்றும் சமுர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பொங்கல்...

2025-01-16 20:18:32
news-image

“ஈழத்து திருச்செந்தூர்” மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர்...

2025-01-15 18:41:40
news-image

கொழும்பு - காக்கைதீவு கரையோரப் பூங்காவில்...

2025-01-15 20:57:46
news-image

கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2025-01-14 19:18:16
news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் திருவாசகம்...

2025-01-13 18:34:02
news-image

திருவெம்பாவை பத்தாம் நாள் பூஜையும்‌ ஆருத்திரா‌...

2025-01-13 18:31:38
news-image

யாழ். சுன்னாகம் புகையிரத நிலையத்தின் 10...

2025-01-13 16:49:45
news-image

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி...

2025-01-13 13:09:42
news-image

யாழ். நல்லூர் சிவன் கோவில் தேர்த்...

2025-01-13 11:53:26
news-image

இந்திய துணைத் தூதரகத்தால் தொண்டைமானாறில் பெண்...

2025-01-13 11:11:36
news-image

வவுனியாவில் ஔவையாரின் நினைவுதினம் அனுஷ்டிப்பு

2025-01-13 11:17:08
news-image

சென்னையில் இடம்பெற்ற புலம்பெயர்ந்தோர் தின நிகழ்வில்...

2025-01-12 19:20:57